விநாயகர் சதுர்த்தி நாளிலோ அல்லது அதற்க்கு முந்தைய நாள் இரவிலோ அனைவருக்கும் நாம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை பகிர ஆரம்பித்துவிடுகிறோம். உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும், WhatsApp Status இல் வைக்கவும் சிறந்த Vinayagar Chaturthi Wishes யை Tamil மொழியில் உங்களுக்கு வழங்குகிறேன்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.
முதலில் கணேஷ் சதுர்த்தி என்று சொல்லப்படும் விநாயகர் சதுர்த்தியை பற்றிய சில முக்கிய தகவல்களை காணலாம்.
Vinayagar Chaturthi Festival
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான ஹிந்து பண்டிகைகளில் (Hindu Festivals) விநாயகர் சதுர்த்தியும் (Vinayagar Chaturthi) ஒன்றாகும். இந்த பண்டிகையில் உள்ள சில சுவாரசியமான தகவல்களையும் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கொண்ட படங்களையும் இந்த பதிவில் காணலாம்.
இந்து மதத்தில் பல பண்டிகைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
இந்து புராணங்களில் சிவன், பார்வதி கடவுள்களின் பிள்ளையாகவும் மற்றும் முருகனின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். அதர்ம வழியில் செல்பவர்களுக்கு தடங்கல்களை கொடுத்தும், தர்ம வழியில் செல்பவர்களுக்கு கஷ்டங்களை போக்கி வருவதாக கணேச புராணம் கூறுகிறது.
முதன்மை கடவுள் விநாயகர்
அனைத்து கடவுள்களுக்கும் முதன்மை கடவுளாக விநாயகர் விளங்குகிறார். எனவே எந்த ஒரு செயலை செய்தாலும், முதன்மை கடவுளான விநாயகரை பூஜித்த பிறகே தொடங்க வேண்டும் என்று அனைவராலும் பின்பற்றப்படுகிறது. ஏனெனில் அப்பொழுது தான் செய்யும் செயல்கள் அனைத்தும் எந்த தடங்கலும் இன்றி நல்ல படியாக நடக்கும் என்று நம்பப்படுகிறது.
திருமணம், வீடுகட்டுதல், வாகனம் ஓட்டுதல் போன்ற எதுவாக இருந்தாலும் அதை மங்களகரமாக தொடங்குவதற்கு, முதன்மை கடவுளுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும்.
விநாயக பெருமாளை பிள்ளையார், விக்னேஸ்வரன், பால கணபதி, வீர கணபதி, சித்தி கணபதி, விஜய கணபதி, கணநாதன், கயமகன், மங்கள மூர்த்தி, ஆதி விநாயகர், தந்திமுகன், மகா கணபதி, ஓற்றைக்கொம்பன், கஜ முகன், போன்ற நூற்றுக்கணக்கான பெயர்களில் அழைப்பார்கள்.
பிள்ளையாரின் வயிறு பெரியதாக இருக்கும். இது எதை குறிக்கிறது என்றால், எல்லா உலகங்களும், உயிர்களும் தன்னுள் அடங்கியுள்ளது என்று பொருளாகும்.
விநாயகருக்கு பிடித்தமான உணவுகள்
ஒவ்வொரு ஆண்டும் கணேஷ் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது அவருக்கு பிடித்த கொழுக்கட்டையை முக்கிய உணவாக படைப்பார்கள். அதனுடன் சுண்டல், வடை, அப்பம், அவள், பொறிக்கடலை போன்ற உணவு பொருட்களையும் படைப்பார்கள்.
மேலும் பழ வகைகளில் வாழைப்பழம், திராட்சை, விளாம் பழம், நாவல், ஆப்பிள், கொய்யாப்பழம், கரும்பு துண்டுகள் போன்றவற்றை படையலிட்டு சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.
Kozhukattai – கொழுக்கட்டை
இதில் கொழுக்கட்டையானது ஒரு முக்கிய உண்மையை உலகிற்கு உணர்த்துகிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற தோலாக இருக்கும் மாவானது அண்டத்தை குறிக்கிறது. அதன் உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மத்தை குறிக்கிறது.
நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மாயையானது மூடி மறைக்கிறது. இந்த மாயையை நீங்கள் நீக்கிவிட்டால் பல நல்ல பண்புகள் வெளிப்படுகிறது. இதுவே விநாயகருக்கு முக்கிய உணவாக படைக்கப்படும் கொழுக்கட்டையின் தத்துவமாகும்.
விநாயகரின் பூஜைக்கான பொருட்கள்
விநாயகருக்கான கோவில்கள்
விநாயகரை கரைத்தல்
Vinayagar Chaturthi Best Wishes in Tamil 2023
உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்வதற்காக Best Vinayagar Chaturthi Wishes யை உங்களுக்கு வழங்குகிறேன். இந்த படங்களை Download செய்து மகிழ்ச்சி அடையுங்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !!!

அனைவரும் நலம் பெற்று வாழ
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

கணபதியை வழிப்பட்டு
வாழ்வில் துன்பங்கள் அனைத்தையும்
விரட்டுவோம்
இனிய விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்

வெற்றி விநாயகர்
உங்களின் வாழ்வில்
பல வெற்றிகளை
கொடுத்து வளப்படுத்தட்டும்
கணேஷ் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

தடைகள் நீங்கி
வாழ்வில் முன்னேற
அனைவருக்கும்
விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்

ஆணை முகத்தானை
வழிப்பட்டு
ஆரோக்கியத்துடன் வாழுங்கள்
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

நிறைந்த செல்வங்களும்
அதிக ஆயுளும் பெற்று
சிறப்புடன் வாழ்க
அனைவருக்கும்
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

ஆணை முகத்தானே போற்றி
முழு முதற்கடவுள் போற்றி
வெற்றி விநாயகனே போற்றி
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

ஞானக்கடவுள் கணபதியை
வழிபடு
உன் துன்பங்களில் இருந்து
விடுபடு
மகிழ்ச்சியுடன்
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

கணபதியிடம் சரணடைவோம்
வாழ்க்கையில்
துன்பங்களை மறந்திடுவோம்
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

உங்களின் குடும்பத்தினர்
அனைவருக்கும்
மகிழ்ச்சி பொங்க
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

தும்பிக்கையுடைய கடவுகளே
எங்கள் வாழ்வில்
நம்பிக்கை ஏற்றுவாயாக
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

வினைகளை தீர்ப்பவனே போற்றி
நல்லோர்க்கு துணை நிற்பவனே போற்றி
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

அருகம்புல் பிரியனே
கஜமுகத்தானே
எங்கள் வாழ்வில்
வினைகளை தீர்த்து அருள்புரிவாயாக
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்
அந்த மகிழ்ச்சி
வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்

வினைகளை தீர்க்கும் விநாயகர்
கஷ்டங்களை போக்கும் கணபதி
ஞானத்தை வழங்கும் ஞானக்கடவுள்
இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்
இந்த பதிவில் விநாயகரை பற்றிய சில முக்கியமான தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். மேலும் வாழ்த்துக்களை பகிர்வதற்கான Vinayagar Chaturthi Wishes படங்களையும் பெற்றுக்கொண்டீர்கள். விநாயகர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள் மற்றும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சி அடைய வாழ்த்துக்கள்.