
நாம் பல்வேறு சூழ்நிலைகளில் மன அழுத்தங்களை சந்திக்கிறோம். இது வாழ்க்கைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே அனைவரும் இதிலிருந்து தப்பிக்க புதுமையான வழிகளை தேடுகிறோம்.
நாம் அனைவரும் மன அழுத்தம் மற்றும் துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்கு Motivational Quotes மிகவும் உதவி புரிகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டுமானால் ஊக்கம் தேவைப்படுகிறது. அந்த ஊக்கத்தை மோட்டிவேஷனல் Quotes மூலம் பெறலாம்.
இந்த Motivational Quotes ஆனது சரியான நேரத்தில் ஞானத்தை வழங்குகிறது. வாழ்க்கையில் சாதித்து காட்ட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. இது உங்களை சரியான வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.
இங்கு மிகசிறந்த Motivational Quotes யை உங்களுக்கு Tamil மொழியில் வழங்குகிறேன். இவற்றில் உங்களுக்கு ஊக்கமளிக்கும் மேற்கோள்களை தேர்வு செய்து அவற்றை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
வாழ்வில் வெற்றியடைந்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்…
அனைவரும் பயணிக்கும் பாதையில்
செல்லாதே
உனக்கான பாதையை
நீயே தேர்வு செய்துகொள்
அல்லது உருவாக்கிக்கொள்.
எத்தனை துன்பங்கள்
வந்தாலும்
என்னை தூக்கி நிறுத்தும்
மூன்றாவது கை
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
என்ற விதையை விதைத்து
முயற்சி என்னும்
தண்ணீரை ஊற்றி வா
வெற்றிக்கனிகளை பறிக்கலாம்
இருளான
வாழ்க்கையில் தான்
பல கனவுகள்
பிறக்கின்றன
நீ
உயர பறப்பதற்கு
உன் சிறகுககளை
வலிமையாக்கு
சில இடங்களில்
பேசாமல் மௌனமாக
இருந்தாலே
பிரச்சனைகள் எழாது
வண்ணங்கள் எழும்
வானத்தை அழகாக்குகின்றன
நல்ல எண்ணங்கள் யாவும்
மனிதனை அழகாக்குகின்றன
நீ செய்யும்
ஒவ்வொரு செயலுக்கான
விளைவுகள்
விதைத்துக்கொண்டே வரும்
அது
நல்லதானாலும் சரி
கெட்டதானாலும் சரி
யாரிடத்திலும்
அதிகமாக எதிர்ப்பாக்காதே
இல்லையென்றால்
ஏமாற்றங்களே மிஞ்சும்
உன்னை
எப்போதும்
அடுத்தவர்களுடன்
ஒப்பிட்டு பார்க்காதே
உனக்கென்று
ஒரு தனித்தன்மை இருக்கிறது
துன்பங்களுக்கு பயந்து
ஓடுவதை விட
அதை எதிர்கொள்ள
பழகிக்கொள்ளுங்கள்
உனக்கான
சரியான இலக்கை
தேர்வு செய்தாலே
வெற்றி நிச்சயம்
உன்னால் எதையும்
செய்ய முடியும்
என்று நம்பு
அந்த நம்பிக்கை தான்
இலக்கை
அடைவதற்கான பாலம்
பல தோல்விகளை கண்ட
வெற்றி தான்
எல்லோராலும்
அதிகமாக பேசப்படும்
நாளைய பொழுதில்
கண்திறப்போம்
என்ற நம்பிக்கையில் தான்
நாம் அனைவரும்
நிம்மதியாக உறங்குகிறோம்
நீ கீழே விழும்போது
உன்னை
தாங்கி பிடிக்கும்
ஒரே கை
உன்னுடைய தன்னம்பிக்கை
ஒரு நாள்
உனக்கான
நாளாக இருக்கும்
அன்று
நீ நினைப்பது தான்
நடக்கும்
தோல்விகளை
கண்ட மனம் தான்
பல வெற்றிகளை
குவிக்கும்
வெற்றிகளின்
படிகள் தான்
தோல்விகள்
ஒரு வெற்றியில்
கற்றுக்கொண்டதை விட
பல தோல்விகளில்
கற்றுக்கொண்டதே
அதிகம்
உன்னை
தூக்கி எறிந்த
உறவுகளுக்கு முன்பு
வாழ்ந்து காட்டுவதே
அவர்களுக்கான
தண்டனை
எல்லாம்
தெரியும் என்று
சொல்பவர்களை விட
ஒவ்வொரு நாளும்
கற்றுக்கொள்பவர்களே
வாழ்க்கையில்
வெற்றியடைகிறார்கள்
நீ பட்ட அவமானங்களை
ஒருபோதும் மறவாதே
ஏனெனில்
அது இன்னொரு முறை
அவமானப்படாமல்
காப்பாற்றும்
ஒருபோதும்
தன்னம்பிக்கையை
இழந்துவிடாதே
அது தான்
உன் வாழ்க்கையை
பிரகாசமாகும்
மற்றவர்கள் சொல்லும்
அறிவுரைகளை கேள்
ஆனால்
முடிவுகளை
நீ மட்டும் தான்
எடுக்க வேண்டும்
வெற்றிக்கான மந்திரம்
தன்னம்பிக்கை
விடாமுயற்சி
கடின உழைப்பு
பொறுமை
இன்பங்களும் துன்பங்களும்
இரவு பகல் போல
இவை மாறி மாறி
வந்துகொண்டிருக்கும்
என்பதை ஏற்றுக்கொள்
பல தோல்விகளை கடந்து
சாதனை படைப்பவர்களே
நிலைத்து நிற்கின்றனர்
தாழ்வு மனப்பான்மை
என்பது
வாழ்க்கை பயணத்தின் தடை
அதை தகர்த்தெறிந்தால் மட்டுமே
முன்னோக்கி செல்ல முடியும்
மற்றவர்களின் மீது
பழி போடாதே
உன் வாழ்க்கைக்கு
நீ தான்
பொறுப்பு
தன்னம்பிக்கை
கொண்ட மனிதன்
வாழ்க்கையில்
எந்த தடைகளையும்
தகர்தெறிவான்
கவலையும் பயமும்
நம்மை பிடித்துக்கொள்வதில்லை
நாம் தான் அவற்றை
பிடித்துக்கொள்கிறோம்
ஒவ்வொரு நாளும்
இன்று
நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு
என்ன செய்தோம் என்று
நினைத்து பாருங்கள்
இது
நீங்கள் சரியான பாதையில்
செல்கிறீர்களா என்பதை
கண்காணிக்க உதவும்
சில வெற்றிகளை
பெற்றவர்களை விட
பல தோல்விகளை
பெற்றவர்களுக்கே
மன வலிமை
அதிகம்
நீ தோல்வி
அடையும் போது
மீண்டும் முயற்சி
செய்ய வேண்டும்
என்பதை புரிந்துகொள்
எதிரி தான்
உன் இலக்கை
விரைவாக
அடைய செய்பவர்கள்
வெற்றி
அடைபவர்களை விட
தோல்வி அடைபவர்களுக்கே
நிறைய
அனுபவங்கள் கிடைக்கும்
சில முயற்சிகள்
தோல்வியில் முடியலாம்
ஆனால்
நீங்கள் செய்த
பயிற்சியின் மதிப்பு
என்றும் குறையாது
உனது தன்னம்பிக்கையே
உன்னை
உயர்வான நிலைக்கு
கொண்டு செல்லும்
முயன்றால்
முடியாது என்று
எதுவும் இல்லை
எல்லாமே
முடியக்கூடியது தான்
எதை இழந்தாலும்
தன்னம்பிக்கையை
மட்டும் இழக்காதே
அது தான்
உன் வாழ்க்கையின்
ஆணி வேர்
இந்த உலகில்
எதையும் சாதிக்க முடியும்
தன்னம்பிக்கையை
இழக்காத வரையில்
எத்தனை
தோல்விகள் வந்தாலும்
தொடர்ந்து
உற்சாகத்துடன் செயல்படு
வெற்றியை நெருங்கிவிட்டோம்
என்ற நம்பிக்கையில்
தோல்விகள் கூட
துவண்டு போகும்
உன் முயற்சிகளை கண்டு
வெற்றிகள்
உன்னை தேடி வரும்
தோல்விகளை
விரட்டி அடிக்கும்போது
உங்களின் பிரச்சனைகளை
நீங்களே தீர்த்துக்கொள்ள
பழகிக்கொள்ளுங்கள்
தன்னம்பிக்கையும்
மன வலிமையும்
அதிகரிக்கும்
எதிரிகளை வெல்பவன்
வீரன்
தன்னையே வெல்பவன்
மாவீரன்
நேரத்தினை
திட்டமிட தெரியாதவர்கள்
நேரமில்லை நேரமில்லை
என்று கூறி
நேரத்தை வீணடிக்கிறார்கள்
நேரங்கள்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை
ஆனால்
சில செயல்களை செய்ய
நாம் தான்
நேரத்துக்காக
காத்திருக்க வேண்டும்
வெற்றி கதைகளை
படிப்பதை விட
தோல்வி கதைகளை
படிக்கும்போது தான்
புதிய சிந்தனைகள்
தோன்றும்
வண்ணமயமான வானவில்
வானத்திற்கு அழகு சேர்க்கிறது
நம்பிக்கை
மனிதர்களின் வாழ்க்கைக்கு
அழகு சேர்க்கிறது
உனக்கு ஏற்படும்
துன்பங்களை கண்டு
வருந்தாதே
அது தான் உனக்கு
பிற்காலத்தில்
எதையும் தாங்கும்
இதயத்தை அளிக்கிறது
தொடர்ந்து துணிந்து செல்
வென்றிடலாம் எதையும்
தொடர்ந்து
தோல்விகள் கண்டாலும்
நிச்சயமாக வென்றிடலாம் ஓர் நாளில்
மன உறுதியுடன் செயல்படு
உன் கனவுகள்
ஓர் நாளில்
நனவாகும்
நம்பிக்கையோடு இரு
வாழ்வில்
நிச்சயம்
சாதிக்க முடியும்
தன்னம்பிக்கையும்
திறமையும்
இருந்தால்
உன்னால் முடியும்
என்று தொடர்ந்து
முயற்சி செய்
வேதனைகளும்
சாதனைகளாகும்
என்னால் முடியும்
என்ற வாக்கியத்தை
எப்போதும்
நினைவில் கொள்
தன்னம்பிக்கையும்
முயற்சியும்
இருப்பவனே
வெற்றியாளன் ஆகிறான்
துன்பங்கள்
பல வந்தாலும்
துவண்டு போகாமல் இரு
வெற்றி உனது தான்
உன்னை
குறை கூறுபவர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்காதே
உனக்கு
ஊக்கம் அளிப்பவர்களுக்கு
எப்போதும் முக்கியத்துவம் கொடு
தோல்விகள்
பல கண்டாலும்
இறுதியில்
வெற்றி உனக்கே
தன்னம்பிகையுடன்
செயல்படும் வரை
பல முறை
முயற்சி செய்தேன்
என்பதை விட
வெற்றி கிடைக்கும் வரை
முயற்சி செய்வதே
சிறந்தது
காலம்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை
காலத்தின் மீது
குறை கூறாமல்
துணிந்து செல்பவனுக்கே
வெற்றி கிட்டும்
உன் வாழ்வில்
வெற்றி கனியை
பறிப்பதற்கு போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
மற்றவர்களின் துன்பம்
இருக்கக்கூடாது என்று
உறுதியுடன் இரு
வாழ்க்கையில்
தன்னம்பிக்கை உள்ளவனே
எப்போதும் வெற்றி பெறுகிறான்
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும்
கலங்கி நிற்காதே
நம்மால் முடியும் என்று
நம்பிக்கை கொண்டு
வீறு நடை போடு
வெற்றி
உன் வசமாகும்
எத்தனை தடைகள்
வந்தால் என்ன
நம்பிக்கையோடு
அடியெடுத்து வைத்தால்
வாழ்க்கை
உன் வசமாகும்
கரடு முரடான பாதைகளை
கடந்தால் தான்
ஒரு மலையின்
உச்சிக்கு போக முடியும்
பல துன்பங்களை
கடந்தால் தான்
வெற்றி என்னும் உயரத்தை
அடைய முடியும்
மற்றவர்களின் உதவியுடன்
தன்னை உயரமாக
காட்டிக்கொள்வதை காட்டிலும்
தனித்து நின்று
தன்னுடைய நிஜ உயரத்தை
காட்டுபவனே
வாழ்க்கையில்
தன்னம்பிக்கையுள்ள மனிதன்
எப்போதும் தோல்விகள் தான்
வந்து சேரும்
பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கி வீசுங்கள்
வெற்றி உங்கள்
காலடியில் இருக்கும்
எவ்வளவு பெரிய மலை ஆயினும்
உன் காலடியில் தான்
தன்னம்பிக்கையும்
முயற்சியும் இருந்தால்
வெற்றியடைய
நீ செய்யும்
பயிற்சியையும்
முயற்சியையும்
ஒருபோதும்
கை விட்டுவிடாதே
வெற்றி
உன் காலடியில்
என்பதை மறவாதே
உளியின் வலிகளை
தாங்கிக்கொண்டால் தான்
சிற்பமாக மாற முடியும்
துன்பத்தின் வலிகளை
தாங்கிக்கொண்டால் தான்
நினைத்த வாழ்க்கையை
வாழ முடியும்
ஓங்கி உயர்ந்து நிற்கும்
வானம் கூட உயரமில்லை
உன்
தன்னம்பிக்கைக்கு முன்பு
உன் வளர்ச்சியை தடுக்க
எப்போதும் ஒரு கூட்டம்
இருந்து கொண்டு தான் இருக்கும்
அவர்களை
எதிர்த்து போராடினால் தான்
வாழ்க்கையில்
முன்னுக்கு வர முடியும்
உன்னால் முடியும்
என்று நம்பிக்கை கொண்டு
சாதித்து கொண்டே இரு
வாழ்வில்
மற்றவர்கள்
சொல்வதை கேட்டு
உன் பாதையை
தீர்மானிக்கதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடுத்துக்கொள்
உனக்கு பிடித்தவாறு
ஏற்கனவே உருவாக்கிய
பாதையில் செல்வதை விட
நீயே
புதிய பாதையை உருவாக்கு
உன்னை பின்தொடர
பலர் வருவார்கள்
ஒரு இலக்கை அடைவதற்கு
பல வழிகள் இருக்கலாம்
அதில் ஒன்றை தேர்வு செய்து
அதில் தொடர்ச்சியாக
பயணம் செய்வதே
இலக்கை அடையும்
சிறந்த வழியாகும்
எல்லைகளற்ற
ஆகாயத்தையும் அளக்கலாம்
எண்ணற்ற நட்சத்திரங்களையும்
எண்ணிடலாம்
முடியும் என்று
முயற்சி செய்தால்
வெற்றியும் தோல்வியும்
இரவு பகல் போல
இரண்டையும்
சமமாக ஏற்றுக்கொள்பவரே
சிறந்த வெற்றியாளர்
தன்னம்பிக்கை
கொண்ட மனிதனுக்கு
எக்கையின் உதவியும்
தேவை இல்லை
பல தோல்விகளை கண்டவனே
மிகப்பெரிய
வெற்றி பெறுகிறான்
வெற்றிகள்
உன்னை மகிழ்ச்சியாக்கும்
தோல்விகள்
உன்னை வலிமையாக்கும்
இரண்டுமே தேவை
என்பதை உணர்ந்துகொள்
இலக்கை
நோக்கி செல்லும்
பாதைகளில்
தடைகள் இருந்தால்
அதை தகர்க்க வேண்டும்
என்ற அவசியமில்லை
அதற்க்கு பதில்
அதை தவிர்த்து
விட்டும் செல்லலாம்
நிகழ்காலத்தில்
கடினமாக உழைத்தால்
எதிர்காலத்தில்
மகிழ்ச்சியான வாழ்க்கை
வரவேற்கும்
விலைமதிப்பில்லாத
நேரத்தை வீணடிக்கிறவன்
அவன் வாழ்க்கையையும்
வீணடிக்கிறான்
ஆசைகளை
கட்டுப்படுத்து
துன்பத்தையும்
கட்டுப்படுத்தலாம்
மலையையும்
நகர்த்திவிடலாம்
நம்பிக்கை
இருந்தால்
யாருக்காகவும்
உன்னை மாற்றிக்கொள்ளாதே
நீ நீயாக இரு
காலம் உன்னை
தூக்கி எறிவதற்குள்
உன் கடமையை
செய்துவிடு
தளராத
மனம் உள்ளவனுக்கு
நிகராக
யாரும் இல்லை
உன் திறமைகளை
வளர்த்துக்கொள்
வெற்றி
உன்னை தேடி வரும்
வாய்ப்புகள்
வரும் போது
அதை
சரியாக பயன்படுத்திக்கொள்
இல்லையென்றால்
வாய்ப்புகளை
நீ தேட வேண்டும்
எவ்வளவு பெரிய
துன்பங்கள் வந்தாலும்
உன்னை வெல்ல முடியாது
நம்பிக்கை விடா முயற்சி
என்ற ஆயுதங்கள்
உன்னிடம் இருக்கும் வரை
நீ
வாழ்க்கையில்
எதை வேண்டுமானாலும்
இழக்கலாம்
ஆனால் ஒருபோதும்
உன் தன்னம்பிக்கையை
மட்டும் இழந்துவிடாதே
நேரம் கடந்து
செய்யும் செயல்
மதிப்பில்லாமல்
போகிறது
நாம்
தோல்விகள் மூலம்
கற்றுக்கொள்ளும்
பாடத்தை
எவராலும்
கற்றுக்கொடுக்க
முடியாது
நேரத்தின் மதிப்பு
அதை
தவற விட்டவர்களுக்கு
மட்டுமே தெரியும்
நீ எப்போதும்
தோல்விகளை மட்டுமே
பெற்றுக்கொண்டிருந்தால்
சரித்திரம் படைக்க
தயாராகி கொண்டிருக்கிறாய்
என்று அர்த்தம்
வெற்றி என்னும்
கனியை பறிப்பதற்கு
தோல்விகள் என்னும்
படிக்கட்டுகள் தேவை
உனக்கென்று
ஒரு அடையாளத்தை
உருவாக்கிக்கொள்
அதுவே
உன் மிகப்பெரிய
சொத்து
உளி
இருந்தால் தான்
சிற்பத்தை செதுக்க முடியும்
குறை கூறுபர்கள்
இருந்தால் தான்
உங்களை நீங்களே
செதுக்கிக்கொள்ள முடியும்
நீ வெற்றி பெற்ற பிறகு
புகழ்ந்து பேசுபவர்களை விட
நீ தோல்வியடையும் போது
நம்பிக்கை ஊட்டுபவர்களே
உனக்கு தேவை
உன்னால் முடியும்
என்று நினைத்தால்
எதையும் செய்யலாம்
உன்னால் முடியாது
என்று நினைத்தால்
எதையுமே
செய்ய முடியாது
தோல்வி அடைவோம்
என்று எண்ணி
செயல்படாமல்
இருப்பதை விட
போராடி தோற்பதே
சிறந்தது
ஒவ்வொரு தோல்வியும்
உன்னை வெற்றிக்கு
அருகில் கொண்டு செல்லும்
படிகள் என்பதை
புரிந்துகொள்
வெற்றிகளின் பிறப்பிடம்
தோல்விகள் என்னும்
ஊற்றுகளில் தான்
தும்பிக்கையின்
பலத்தை விட
நம்பிக்கையின்
பலமே பெரியது
நம்பிக்கையோடு செயல்படு
முயற்சி செய்ய
ஒருபோதும் தயங்காதே
முட்களும் முத்தமிடும்
நீ முயற்சி செய்யும் போது
தயக்கங்கள்
உன்னை எங்கும்
நகர விடாது
நம்பிக்கையுடன்
முயற்சி செய்
வெற்றிக்கான
பாதை பிறக்கும்
ஒரு நாள்
உனக்கான விடியல் வரும்
அன்று எல்லாமே மாறும்
நம்பிக்கையுடன்
பயணம் செய்
நீர் ஆவியாகி
மேல் செல்வது
மீண்டும்
பூமியை நோக்கி
விழுவதற்கே
தோல்விகள்
உயர்ந்து கொண்டே
செல்வது
வெற்றிக்கனியாக
உன் மடியில் விழுவதற்க்கே
ஒரு
சிறிய விதையினுள்
மிகப்பெரிய மரம்
அடங்கியிருக்கும்
அதேபோல்
உன்னுள் வானளவு
உயர்ந்த வெற்றிகள்
அடங்கியுள்ளது
ஒரு விதையினை
மண்ணுள் புதைத்தாலும்
அது பூமியை பிளந்து
மேலே வரும்
உன்னை
எத்தனை தோல்விகள்
புதைத்தாலும்
அவற்றை பிளந்து
மேலே வா
கரு மேகங்கள்
சூழ்ந்தாலும்
சூரிய ஒளியை
மறைக்க முடியாது
எவ்வளவு பிரச்சனைகள்
வந்தாலும்
உன் வெற்றியை
தடுக்க முடியாது
தோல்விகளால் விழுந்தால்
விரைவாக எழுந்து நில்
ஒருவேளை
எழவில்லை என்றால்
இந்த உலகம்
புதைத்துவிடும்
தோல்விகளும்
மிரண்டு ஓடும்
உன் தன்னம்பிக்கையின்
வலிமையை பார்த்து
உன்னால் வேகமாக
நடக்க முடியவில்லை
என்றாலும்
மெதுவாக நட
ஆனால் ஒருபோதும்
பின்வாங்காதே
உன்னை எப்போதும்
உற்சாகமுடன் வைத்துக்கொள்
அதுவே
உன்னை நகர்த்தும்
உந்து சக்தி
பயம் வந்துவிட்டால்
தோல்வி
உன்னை நெருங்கிவிடும்
பயத்தை விட்டொழித்து
வெற்றியை நோக்கி நட
உன் திறமையின்
மீது உனக்கே
நம்பிக்கை இல்லையென்றால்
இந்த உலகம்
எப்படி நம்பும்
நீ பேசவேண்டிய
இடத்தில்
பேசாமல் விட்டுவிட்டால்
அது
உன் வாழ்நாள்
பிழையாகிவிடும்
சூரியன்
மேற்க்கே மறைந்தால் தான்
கிழக்கே உதிக்கும்
உன்னுள் இருக்கும்
பயங்கள் மறைந்தால் தான்
நம்பிக்கை என்னும்
விடியல் பிறக்கும்
உன்னுள் இருக்கும்
எண்ணற்ற ஆற்றல்களை
வெளிக்கொண்டு வருவது
விடா முயற்சியும்
கடின உழைப்புமே
உன்னை
மேம்படுத்திக்கொள்வது
நல்லது தான்
ஆனால்
உன் இயல்பை
யாருக்காகவும்
மாற்றிக்கொள்ளாதே
இல்லையெனில்
நிம்மதியை இழப்பாய்
உங்களுக்கேற்ற
சூழ்நிலை
தானாக உருவாகாது
நீங்கள் தான்
உருவாக்கிக்கொள்ள
வேண்டும்
தோல்விகளில் இருந்து
கற்றுக்கொள்ள
பழகிக்கொள்ளுங்கள்
அது மேன்மேலும்
உங்களை மேன்மையாக்கும்
முடியாத செயல்களை
முடித்து காட்டுவேன்
என்று சொல்வதே
தன்னம்பிக்கை
தீர்வுகள் இல்லாத
கஷ்டத்தை இறைவன்
கொடுப்பதில்லை
அனைத்திற்கும்
தீர்வுகள் உண்டு
தன்னம்பிக்கையோடு
செயலாற்று
நீ செய்யும்
ஒவ்வொரு முயற்சியும்
அதற்கான வெற்றியை
தேடித்தரும்
மாற்றம் என்பது
முதலில் உன்னிடத்தில்
இருந்து தான்
தொடங்க வேண்டும்
அதை மற்றவர்களிடத்தில்
எதிர்ப்பார்க்காதே
இந்த உலகத்தில்
யார் யாரையும்
மாற்ற முடியாது
அவர்களாகவே
மாற வேண்டும்
என்று நினைக்கும் வரையில்
தன்னம்பிக்கையோடு
உழைத்தால்
உயர்ந்த நிலையை
அடையலாம்
ஓய்வில்லாமல்
உழைக்கும்
கடிகாரத்தை போல
தோல்விகளை
பல கண்டால் தான்
நம்முடைய
தன்னம்பிக்கையின்
பலத்தை
தெரிந்துகொள்ள முடியும்
மற்றவர்கள்
நம்மை பற்றி
என்ன நினைப்பார்களோ
என்று நினைத்துக்கொண்டிருந்தால்
உன்னால் எப்போதும்
ஜெயிக்க முடியாது
கடல் நீர் அனைத்தும்
ஒன்று சேர்ந்தாலும்
ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது
கப்பலுக்குள் நீர் புகாத வரை
அதுபோல்
பிரச்சனைகள் உன்னை தீண்டாது
நீ அனுமதிக்காத வரை
வாழ்க்கையில்
வெற்றி பெறவேண்டுமானால்
பல
தோல்விகளில் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டும்
உன்னுடைய
வெற்றிக்கு
யாருடைய உதவியும்
தேவைப்படாது
உன்னுடன்
தன்னம்பிக்கை இருக்கையில்..
வெற்றி அடைவதற்கான
நேரத்தை நீட்டித்தாலும்
உன் வெற்றியை
யாராலும்
தடுக்க முடியாது
எவரெஸ்ட் சிகரம்
உயரமானது தான்
ஆனால்
உன் தன்னம்பிக்கையை விட
வலிமையானது இல்லை
வெற்றி அடைவதால்
மகிழ்ச்சி கொள்கிறாய்
தோல்வி அடைவதால்
கற்றுக்கொள்கிறாய்
இதில் வருத்தப்பட
ஏது இருக்கிறது
ஆயிரம் தடைகள்
வந்தாலும்
உறுதி கொண்ட மனம்
எதற்கும் கலங்காது
தன்னம்பிக்கையும்
மன உறுதியுமே
ஒருவரை
வெற்றிப்பாதைக்கு
அழைத்துச்செல்லும்
உன் வாழ்வில்
எவ்வளவு பெரிய
கஷ்டங்கள் வந்தாலும்
அதை
எதிர்த்து நின்றால்
வென்றுவிடலாம்
உன்னுள் இருக்கும்
குறைகளை பார்க்காதே
அது உன்னை
கீழே இறங்கிவிடும்
உன்னுள் இருக்கும்
நிறைகளை பார்
அது உன்னை
உயரே கொண்டு செல்லும்
வலிகளை தாங்கும்
சிறகுகளால் தான்
உயரத்தில் பறக்க முடியும்
துன்பங்களை தாங்கும்
மனதால் தான்
உன்னை உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்லும்
இலக்கை அடைவதற்க்கான
பாதையை
நீ தேர்வுசெய்யவில்லை என்றால்
அது என்றும்
தூரத்தில் இருக்கும்
எட்டாத கனியாகிவிடும்
சலனமற்ற நீரால் மட்டுமே
தெளிவான முகத்தை
காட்ட முடியும்
அதுபோல்
அமையான மனத்தால் மட்டுமே
தெளிவான முடிவுகளை
எடுக்க முடியும்
ஆயிரம் தோல்விகளை கண்டு
மனம் தளராதே
ஏனென்றால்
தோல்விகள் தான் உனது
முதல் குரு
சவால்கள் இல்லாத வாழ்க்கை
சாதரணமானது
சவால்களை வென்று வாழ்வதே
சாமர்தியமானது
இனியாவது வாழ்வில்
வரும் சவால்களை வென்று
வாழ்வை வண்ணமயமாக்குவோம்
உனக்குள் உள்ள திறமையை
முதலில் தேர்ந்தெடு
பிறகு அதை பயிற்சி செய்
இறுதியில் உன்னை அசைக்க
அந்த ஆண்டவனாலும் முடியாது
நிலவை தொட்டுவிட வேண்டும் என்ற
உயரத்திற்கு ஆசை கொள்
அப்போது தான் நீ ஒரு மரத்தின்
உச்சியையாவது சென்றடைவாய்
நேரத்தை வீணடிக்கும் போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை
இலட்சியமும் முயற்சியும்
இல்லாத மனிதன்
வேரில்லாத மரம்
கூடில்லாத பறவைக்கு
சமம்
நீ முன்னேற்ற பாதையை நோக்கி
பயணம் செய்யும் போது
உன்மீது ஆயிரம்
கற்கள் வீசப்பட்டாலும் துவண்டு விடாதே
ஒருநாள் அத்தனை கற்களும்
வைர கற்களாக மாறும்
பணத்தால் வாங்க முடியாத
இரண்டு விஷயம்
ஒன்று அம்மாவின் அன்பு
மற்றொன்று செலவழித்த நேரம்
போட்டி என்று வரும் போது
நீ உன் இலக்கை நோக்கி ஓட வேண்டும்
உனது சக போட்டியாளர்களை
பார்த்து அல்ல
வெற்றி உனக்கு மட்டுமானது அதை
விட்டு விட கூடாது என்று
உறுதி கொள்
துன்பத்தை கண்டு
துவண்டு விடாதே
இன்பம் வந்து சேர
சிறுது நாட்கள் தான் உள்ளது
இன்று நீ சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீரும்
நாளை உன்னை
அலங்கரிக்கும் முத்துக்களாக
மாறும்
தோற்றாலும் ஜெயித்தாலும்
சிரித்து கொண்டே இரு
ஏனெனில் எதுவும் இங்கு நிரந்தரம்
இல்லை
இன்று உன்னை
மதிக்காதவரை ஒரு நாளும் நீ
திரும்பி பார்க்க
தேவையில்லை
உனது குறிக்கோளை முடிவு செய்
பிறகு அதை முயற்சி செய்
இறுதியில் அதை சாதனை செய்
நீ ஏழையாய்
பிறந்து விட்டாய் என்று வருந்தாதே
அது உனது தவறு அல்ல
இன்று உலகளவில் சாதித்த
அனைவரும் ஒரு நாள் ஏழையாய்
பிறந்தவர்கள் தான்
இன்று உனது
இலட்சியத்துக்காக நீ
ஓடுகிறாய் என்றால்
அதை நீ வென்றதும்
பலர் உன்னை பின்தொடர்ந்து
ஓடி வருவார்கள்
அப்போது உனது பெயர் மாமனிதன்
முட்கள் குத்தாமல்
அழகிய ரோஜா உன்
கைக்கு வந்து சேராது
அது போல
வலிகள் இல்லாமல் வெற்றி
வந்து சேராது
இடியும் மின்னலும்
அடிக்கும் அதே
சமயத்தில் தான்
அழகிய மழை
சாரலும் பெய்யும்
கஷ்டத்தை நினைத்து
அழுதாள் உனக்கு
தலைவலி தான் மிஞ்சும்
அந்த கஷ்டத்தை
தகர்த்தெறிய சிந்தித்தால்
பல வழிகள் கிடைக்கும்
மனதை திடமாக
வைத்து கொள்
மரணத்தை கூட
வென்று விடுவாய்
பணத்தை கண்டு
மயங்கி விடாதே அதை விட
பெரிய ஆபத்து உலகில்
வேறு ஏதும் இல்லை
உறவுகள் உன்னை
ஒதுக்கி வைத்தால்
அதை ஒரு வாய்ப்பாக
பயன்படுத்தி பிரிந்து விடு
ஏனென்றால் அவர்கள் தான்
உனக்கு முதல் எதிரிகள்
நம்பிக்கை என்னும்
விதையை உனக்குள்
விதைத்து கொண்டே இரு
அது ஒருநாள் பல நூறு செல்வ
நிலங்களாக மாறும்
இன்று ஆயிரம்
தோல்விகளை கடந்து
சென்றால் தான்
ஒரு வெற்றி கிடைக்கும்
மேடு பள்ளங்கள்
நிறைந்த உன் வாழ்க்கையை
உனது திறமையை கொண்டு
அழகிய மலைகளாக
செழிப்பாக்கு
கோவில் கட்டுபவர்கள்
அன்று பயந்து இருந்தால்
நாம் வணங்க இன்று அழகிய கோபுரங்கள்
கிடைத்து இருக்காது
அழகான நீரோடையில்
தான் ஆபத்தான முதலையும்
பதுங்கி இருக்கும்
அதனால் அழகு என்று நினைத்து ஆபத்தில்
மாட்டி கொள்ளாதீர்கள்
நீ விரும்பிய ஒன்று
உனக்கு கிடைக்கவில்லை
என்று வருந்தாதே
எது உனக்கு கிடைத்ததோ
அதை விரும்பியதாக
மாற்றி கொள்
நீ செய்த தவறுக்காக
அடுத்தவரை குறை கூறாதே
உன் வாழ்வில் நடக்கும்
அனைத்திற்கும் நீயே பொறுப்பு
சமூகத்தில் தவறு
நடந்தால் அதை
தட்டி கேள்
இன்று நீ எழுப்பும்
ஒரு குரல்
நாளை சரித்திரமாய் மாறும்
அமைதியாய் கடின உழைப்பை
போட்டு கொண்டே இரு
நீ வெற்றி பெற்றபின்
உனக்கான வாழ்த்து
பல கைகளின்
ஓசையாய் ஒலிக்கும்
நீ பல தோல்விகளை
சந்திக்கின்றாய் என்றால்
நீ மிகவும் அனுபவசாலி
ஆகிறாய்
வெற்றி விரைவில்
உன்னை தேடி வரும்
நீ வீணடிக்கும்
ஒவ்வொரு நொடியையும்
பின் வரும்
நாளில் நினைத்து
பார்ப்பாய்
ஒவ்வொரு நாளும்
விடிந்தவுடன்
“என்னால் முடியும்”
என்ற தாரக மந்திரத்தை
உச்சரித்து கொண்டே இரு
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும்
ஒருவர் உறுதுணையாய்
இருந்திருப்பார்
உன் வெற்றிக்காக
உதவியவரை ஒருநாளும்
மறந்துவிடாதே
ஒரு சவாலான
இலக்கை அடையும் போது
பல தடைகள் வரலாம்
நீ உன் இலக்கை நோக்கி
பயணித்துக்கொண்டே இரு
உன் இலக்கை அடையும் வரை
சோதனைகள் பல கடந்தால் தான்
வாழ்வில் சாதனைகளை புரிய முடியும்
சோதனைகளை நினைத்து கவலை கொள்ளாமல்
தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இரு
மலையளவு தடைகள் வந்தாலும்
மன உறுதியுடன் எதிர்த்து நில்
அவற்றை தகர்த்துவிடலாம்
உன் மன வலிமை என்னும் ஆயுதத்தால்
உன் இலக்கின் மீது
கவனமாக இரு
சிறிது மனம் தவறினாலும்
பாதை மாறிவிடுவாய்
முயல் போன்ற வேகமும்
ஆமை போன்ற தொடர்ச்சியும்
இருந்தால் மட்டுமே
இன்றைய காலத்தில்
வெற்றியை வசமாக்க முடியும்
மற்றவர்கள் வாழ்வதை பார்த்து வாழாதே
உனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கும்
நீ நீயாக வாழ்ந்து காட்டு
நீ மற்றவர்களால்
தூக்கி எறியப்பட்டால்
சோர்ந்து விடாதே
விழுந்த இடத்தில் இருந்து
மரமாய் ஏழு
மற்றவர்கள் வியந்து பார்க்கட்டும்
தோல்விகளை ஏற்காத மனம்
வெற்றிகளை ஏற்க தகுதியில்லை
வெற்றி தோல்வி என்பது
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
இவை இரண்டும் மாறி மாறி
வந்துகொண்டே இருக்கும்
வெயில் வந்தால் தான்
நிழலின் அருமை தெரியும்
தோல்விகள் வந்தால் தான்
வெற்றியின் மதிப்பு புரியும்
கடினமாக உழைத்துக்கொண்டே
இருந்தால் மட்டும் போதாது
தெளிவான திட்டமிடல்
இருந்தால் மட்டுமே
அந்த உழைப்பும்
பயனுள்ளதாக இருக்கும்
அழுத்தங்களை தாங்கும்
வைரமே உடைக்க முடியாத
கல்லாகிறது
வலிகளை தாங்கும் மனிதனே
உறுதியான மனதை பெறுகிறான்
உடலில் குறைகள் உள்ள மனிதன்
ஊனமுற்றவர் அல்ல
மனதில் தன்னம்பிக்கை இல்லாத மனிதனே
உண்மையாக ஊனமுற்றவர்
மேலே வழங்கப்பட்ட Tamil Motivational Quotes அனைத்தும் உங்களின் வாழ்க்கை பயணத்துக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் வாழ்க்கை பயணம் வெற்றி பயணமாக அமைய வாழ்த்துக்கள்.
இந்த பதிவை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.