ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 2022 | Raksha Bandhan Wishes Tamil

ரக்சா பந்தன் என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். முக்கியமாக வட இந்தியாவில் Raksha Bandhan வார்த்தையை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது. இந்த பண்டிகையை ஏன் எதற்காக கொண்டாடுகிறோம்? 

ரக்சா பந்தன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம். மேலும் அழகான  Raksha Bandhan Wishes Images யை Tamil மொழியில் உங்களுக்கு வழங்குகிறேன்.

Raksha Bandhan Meaning in Tamil

ரக்சா பந்தன் என்பது சகோதர சகோதரியின் அன்பான உறவை பலப்படுத்தும் ஒரு சமூக பண்டிகையாகும். இந்நாளில் பெண்கள் தங்களின் சகோதரர்கள் அல்லது சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி என்று சொல்லப்படும் மஞ்சள் நூலை காட்டுவார்கள்.

இவ்வாறு ரக்சா பந்தன் நாளில் ராக்கி கட்டுவதற்கு என்ன அர்த்தம் என்றால், ராக்கி கட்டும் பெண்களை ஆண்கள் சகோதரிகளாகவும் மற்றும் பெண்கள் ஆண்களை சகோதரர்களாகவும் ஏற்றுக்கொள்வதாக கருதப்படும்.

இதில் ராக்கி கயிறை பாதுகாப்பு நூல் என்று கூறுவார்கள். ஒரு ஆண் இந்த ராக்கியை ஏற்றுக்கொள்வதன் மூலம், சகோதரியின் பாதுகாப்புக்கும், வாழ்க்கைக்கும் ஒரு பாதுகாவலனாக இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

ரக்சா பந்தன் பண்டிகையை கொண்டாடும் நோக்கம் என்ன ?

ஒரு குடும்பத்தில் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் அண்னன் தங்கை உறவு என்பது சற்று வேறுபட்டதாகும். அண்ணன் மீது தங்கையும், தங்கையின் மீது அண்ணனும் ஆழமான அன்பை வெளிப்படுத்துவார்கள்.

திருமணத்திற்கு பிறகோ அல்லது சில காரணங்களால் அவர்கள் பிரிய நேரிடலாம். ஆனால் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறை Raksha Bandhan பண்டிகையின் மூலம் அவர்களின் புனிதமான உறவு புதுப்பிக்கப்படுகிறது.

இந்த நாளில் சகோதரர் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

ரக்சா பந்தன் பரிசுகள் 

ராக்கி நாளில் பெண்கள் ஆண்களுக்கு ராக்கியை கட்டிய பிறகு, சகோதரிக்கு பல விதமான பரிசு பொருட்களை வழங்குவார்கள். அல்லது இனிப்புகள், பயணம் மற்றும் பார்ட்டிகள் போன்றவற்றையும் சகோதரிகளுக்கு கொடுப்பார்கள்.

 ஒரு சகோதரிக்கு பரிசு பொருட்களை விட அன்பையும், பாதுகாப்பையும் கொடுப்பதே மிகப்பெரிய பரிசாகும். எனவே அவற்றை கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

புராணத்தில் ரக்சா பந்தன் 

மகாபாரதம் என்ற இதிகாசத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அதில் போரின் போது கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் வரும் இரத்தத்தை தடுப்பதற்காக பாஞ்சாலி தனது சேலையின் ஒரு பகுதியை கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் காட்டினார்.

இந்த சம்பவத்தால் கிருஷ்ணர் திரௌபதியை தனது சகோதரியாக ஏற்றார். மேலும் திரௌபதிக்கு பாதுகாப்பாகவும், தீயவர்களிடம் இருந்து காப்பதாகவும் உறுதியளித்தார்.

அந்த நிகழ்வை தான் ரக்சா பந்தன் விழாவாக கொண்டாடப்படுவதாக கூறுவார்கள்.

ராக்கி பண்டிகை எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் ராக்கி பண்டிகை ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. 

இந்த வருடம் 2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரக்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.

Raksha Bandhan Wishes in Tamil 2022

உங்களின் சகோதரர் அல்லது சகோதரிக்கு Raksha Bandhan Wishes யை சொல்ல வேண்டுமா? உங்களுக்கான வாழ்த்துக்கவிதைகளை வண்ணமயமான படங்களுடன் உங்களுக்கு வழங்குகிறேன். 

உங்களின் அன்பை வாழ்த்துக்கள் மூலம் பகிர்ந்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

சரி வாருங்கள் தற்போது சிறந்த ராக்கி வாழ்த்துக்களை காணலாம்.

 

raksha bandhan meaning in tamil

அண்ணன் தங்கை உறவு 

பிறப்பால் மட்டுமே வருவதல்ல 

அது பாசத்தால் பிணைக்கப்பட்ட 

ஆழமான உறவு 

இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் 


raksha bandhan tamil

மலையளவு காசு பணம் இருந்தாலும் 

அது அண்ணன் தங்கை உறவின் 

அன்பிற்கு ஈடாகுமா.. 


raksha bandhan quotes for sister

என்னுடன் பிறந்து 

அன்பால் இணைந்து 

தோழியாய் இருக்கும் சகோதரிக்கு 

சகோதரரின் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 


raksha bandhan kavithai in Tamil

நம்முடைய பாசம் மற்றும் நம்பிக்கையின் 

பிணைப்பு மேலும் வலுவடைகிறது 

ராக்கி என்னும் அன்பு நூல் கட்டும்போது 


raksha bandhan wishes for brother in tamil

உன்னை போன்ற 

ஒரு தங்கையை பெற்றதற்கு 

நான் மகிழ்ச்சியடைகிறேன் 

என்றும் நீடூடி வாழ்க 

இனிய ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 


rakhi festival wishes images tamil

சகோதரியிடம் இடும் 

சிறு சிறு சண்டைகளும் 

அன்பின் வெளிப்பாடு தான் 


Rakhi wishes tamil

ஒரு தங்கை 

பெரும் மகிழ்ச்சி கொள்கிறாள் 

தன்னுடைய அண்ணனிடம் 

கிடைக்கும் அன்பானது 

தந்தையிடம் கிடைப்பதுபோல் 

உணரவைத்தால் 


raksha bandhan tamil quotes

பிரியாத அன்புடன் 

குறையாத பாசத்துடன் 

நிறைவான வாழ்க்கையை வாழ

என் அன்பு தங்கைக்கு

இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 


raksha bandhan kavithai in tamil

சிறு சிறு சண்டைகள் 

பொய்யான அழுகை 

விட்டுக்கொடுக்கும் குணம் 

இது அல்லவா சகோதர சகோதரி 

பாசத்தின் வெளிப்பாடு 


raksha bandhan meaning in Tami

உடன் பிறவாத 

சகோதரர்களையும் சகோதரிகளையும் 

அண்ணன் தங்கை என்னும் 

பாசத்தில் பிணைக்கும் அன்பு கயிறே 

ரக்ஷா பந்தன் கயிறாகும் 

என் அன்பான இனிய 

ரக்சா பந்தன் நல்வாழ்த்துக்கள் 


இந்த பதிவில் Raksha Bandhan பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டீர்கள். மேலும் உங்களின் சகோதர சகோதரிகளுக்கு அனுப்புவதற்கான வாழ்த்து படங்களையும் பெற்றீர்கள். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

Leave a Comment