Motivational quotes in tamil : நாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு இலக்கை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறோம் . ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனது வாழ்நாளில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது.
அனால் அந்த நாள் ஒரே நாளில் கிடைத்து விடாது . அதற்கு பல தோல்விகளையும் பல சிக்கல்களையும் கடந்து வர வேண்டி இருக்கும். அதே போல விட முயற்சி என்கின்ற ஒரு பாதையை நமே நமக்கு அமைத்து கொள்ள வேண்டும்.
அதற்கு பல பேர் நமக்கு பல அறிவுரைகளை வழங்கி விட்டு சென்று இருக்கிறார்கள் .
“நாம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் அனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்”
அதனால் நாம் இன்று சரித்திரத்தை உருவாக்கி சென்ற பலரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் கடைபிடித்த நெறிமுறைகளை பின்பற்றி நாமும் ஒரு சரித்திரமாய் மாறுவோம் பின்வரும் நம் தலைமுறைகளுக்கும் இதை கொண்டு சேர்ப்போம்.
இந்த பதிவில் நாம் வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் சில அற்புதமான கவிதைகளை தொகுத்தது வழங்கி உள்ளேன்:
Motivational quotes in tamil
முடியும் என்பதை விட,
என்னால் முடியும்
என்பது தான் நம்பிக்கை !

இன்று நீங்கள் கடக்கும்
போராட்ட பாதைகள் ,
நாளை உங்களுக்கு தேவையான
பூ தோட்டத்தை உருவாக்குகிறது !

நான் வெற்றி பெறுவேன்
உடனடியாக அல்ல ,
ஆனால் நிச்சயமாக
வெற்றி பெறுவேன்!

முதலில் உங்களை
நேசியுங்கள்,
ஏனென்றால் உங்கள்
வாழ்நாள் முழுவதையும் நீங்கள்
யாருடன் செலவிடுவீர்கள்
உங்களுடன் தானே !

தோல்வி என்பது
வாழ்க்கையின் ஒரு பகுதி,
நீங்கள் தோல்வியடையவில்லை என்றால்,
கற்றுக்கொள்ள மாட்டீர்கள்,
கற்றுக்கொள்ளவில்லை என்றால்
உங்கள் வாழ்க்கை மாறாது!

யாரையாவது தக்க வைத்து
கொள்ள உங்கள் மோசமான
பக்கத்தை ஒருபோதும் மறைக்காதீர்கள்,
உங்கள் மோசமான
பக்கத்தைக் காட்டுங்கள் பின்
யார் உங்களுடன் இருக்கிறார்கள்
என்று பாருங்கள்!

சில நேரங்களில் நீங்கள்
ஒரு முடிவை எடுக்க
வேண்டிய நிலை வரும் ,
அது உங்கள் இதயத்தை
சுக்கு நூறாய் உடைக்கும்,
ஆனால் அந்த முடிவு
உங்கள் வாழ்வின் மீதி
நாட்களுக்கு அமைதியைத் தரும்!

இரண்டு நபர்களை
நாம் நம் வாழ்வில் மறக்கவே கூடாது
ஒரு நபர் நம்மை
இக்கட்டான சூழ்நிலையில் இழிவாக நடத்தியவர்!
ஒரு நபர் நம்மை
அதே இக்கட்டான சூழ்நிலையில் அறிவுரை கூறி
தோள் கொடுத்தவர்!

சிலர் உங்களை நேசிப்பதே
அவர்களின் தேவைக்கு உங்களை
எவ்வளவு பயன்படுத்த முடியுமோ
அவ்வளவு பயன்படுத்தி கொள்ள தான் ,
அவர்களின் தேவைகள் நிறுத்தப்படும்
இடத்தில் அவர்களின் நேசமும் ,
விசுவாசமும் நிறுத்தப்படும் !

ஒரு நேர்மையான
“மன்னிப்பு”
ஆயிரம் தேவையற்ற
வார்த்தைகளை விட மதிப்புள்ளது!

சிலர் நம் உணர்வுகளைக்
கொன்றுவிட்டு ,
பிறகு ஏன் நீ மாறிவிட்டாய்
என்று கேட்கிறார்கள்!

அழகான முகமும்,
வயதும், சரியான கட்டுடலும்
என்றாவது ஒருநாள் மாறும்
ஆனால் அழகான உள்ளம்
எப்போதும் அழகான
ஆத்மாவாகவே இருக்கும்!

உங்கள் சிந்தனையின் தரம்,
உங்கள் வாழ்க்கையின்
தரத்தை தீர்மானிக்கிறது!

நீ செய்ய முடியும்
என்று நீ நம்புகிறாய் என்றால்,
அது அப்படியே உன்னால்
செய்துமுடிக்கப்படும்!

வெற்றியோடு வாழு
அல்லது சாகும் வரை
முயற்சி செய்!

நீங்கள் வாழ்க்கையில்
இருந்து எதையும்
கற்றுக் கொள்ளமுடியாது ,
நீங்கள் செய்வது தான் சரி
என்று நீங்களே
நினைத்து கொண்டால் !

நாம் வெற்றியை தேடி
பயணம் செய்கிறோம்,
அனுபவம் என்னும்
படகில் !

நீங்கள் சிறந்தவர் என்று
நீங்களே நினைத்து
கொள்ளாதிர்கள்,
உங்களை மேம்படுத்துவதில்
கவனம் செலுத்துங்கள் !

உங்களை
மதிக்காதவர்களிடம்
இருந்து எப்போதும்
தள்ளியே இருங்கள் !

இரவில் நிலவின்
ஒளியை தேடுவதை விட,
நாம் நிலவாக மாறி
கொள்வது தான் நல்லது!

நடந்து முடிந்த ஒன்றை
உங்களால் மாற்ற முடியாது
அதனால் அதை பற்றி யோசிக்காமல்
இனி நடக்க போவதை நோக்கி
பயணம் செய்யுங்கள் !

என் வாழ்க்கையில் எல்லோரும்
எனக்கு தேவையில்லை,
என்னை புரிந்துகொண்டு
எனக்கு உண்மையாக இருக்கும்
ஒரு சிலர் மட்டும் போதும்!

Motivational quotes in tamil for successful life
முயற்சியை கைவிட
தோன்றும் ஒவ்வொரு முறையும்
“இன்னும் ஒரு முறை முயற்சி செய்கிறேன்”
என்று உங்கள் மனசாட்சியிடம்
சொல்லி பாருங்கள்!

எட்டி தொடும் தூரத்தில்
வெற்றியும் இல்லை ,
அதை விட்டு விடும்
எண்ணத்தில் நானும் இல்லை !

கடந்த காலத்தை நினைத்து
அழுகாதே அது போய்விட்டது ,
எதிர்காலத்தை நினைத்து
புலம்பாதே அது
இன்னும் பிறக்கவே இல்லை ,
நிகழ்காலம் மட்டும்
நினைவில் கொண்டு இன்றைய
நாளை இனிமையாக வாழ்ந்திடு !

தோல்வியடைந்த ஒரு விஷயத்தை
பற்றி நீங்கள் கவனம் செலுத்தினால்,
நீங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவீர்கள்,
அனால் அந்த தோல்வி உங்களுக்கு
கற்று கொடுத்த பாடத்தில்
கவனம் செலுத்தினால்,
நீங்கள் தொடர்ந்து வளர்வீர்கள்!

வெற்றியின் வாய்ப்பாடு
1% அதிர்ஷ்டம் 1% திறமை
98% விடா முயற்சி !!!

இமையம் தொடும்
வரை
போராடு இமைகள்
மூடாமல் !!!
