Latest Love Quotes in Tamil | True Love Quotes | தமிழ் காதல் கவிதைகள்

பொதுவாக காதல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான உணர்வு ஆகும். இருப்பினும் ஒரு தாயின் மீதுள்ள அன்பும், வாழ்க்கை துணையின் மீதுள்ள அன்பும் வேறுபட்டதாகும்.

காதல் என்பது அன்பை குறிக்கும். நம்மை சுற்றியுள்ள அனைத்து உறவுகளின் மீதும் அன்பு இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் காதல் என்று கூறுவதில்லை.

பெரும்பாலும் வயதுக்கு வந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் அன்பையே காதல் என்கிறோம்.

காதலர்கள் தங்களின் காதல் அன்பை வெளிப்படுத்தினால் மட்டுமே அது எதிர் பாலினருக்கு புரியும். அவ்வாறு காதலை வெளிப்படுத்த Love Quotes என்னும் காதல் கவிதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த இடுகையில் உங்களின் காதலை வெளிப்படுத்தவும், அதன் ஆழத்தை உணர்த்தவும் Latest Love Quotes என்ற சிறந்த காதல் கவிதைகளை Tamil மொழியில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Latest Love Quotes in Tamil – காதல் கவிதைகள்

Latest Love Quotes in Tamil
Latest Love Quotes in Tamil

ஒரு கன நேரம் கூட

என் கண்கள்

இமைக்க மறுக்கின்றது

உன்னை

பார்த்துக்கொண்டு

இருக்கையில்

கண்களால்

பேசிக்கொள்ளும்

மௌன மொழிகளை

உன்னிடமிருந்து தான்

கற்றுக்கொண்டேன்

ஒவ்வொரு நொடியும்

என் மனம்

ஏங்குகிறது

உன்னை

காண வேண்டுமென்று

மாதத்திற்கு

ஒருமுறை தான்

பௌர்ணமி  வரும்

ஆனால்

எனக்கு

ஒவ்வொரு நாளும்

பௌர்ணமி தான்

நீ

என் அருகில்

இருக்கும்போது

அழகிய

செந்தாமரை மலரும்

நாணம் கொள்ளும்

உன் அழகை கண்டு

புரிதல் இல்லாத

காதல்

காயங்களை தான்

ஏற்படுத்தும்

புரிதலோடு வரும்

காதல் தான்

என்றும்

நிலைத்து நிற்கும்

வாழ்நாள் முழுக்க

சிறையில் இருக்க

விரும்புகிறேன்

உன்

இதயம் என்னும்

சிறையில்

ரோஜா தோட்டத்தில்

இருக்கும்

அனைத்து மலர்களும்

போட்டிபோடும்

உன்

தலை முடியை

அலங்கரிப்பதற்கு

ஒவ்வொரு

நொடியும்

நரகமாக இருக்கும்

நீ

என்னுடன்

பேசாமல்

இருக்கையில்

என்னை

காதல்

என்னும் நோய்

பற்றிக்கொண்டது

உன்னை

கண்டவுடன்

சில நேரங்களில்

என்னையும்

அறியாமல்

தானாக சிரித்துக்கொள்கிறேன்

உன்னை

நினைக்கையில்

என் மனம்

காதலை சொல்ல

ஏங்குகிறது உன்னிடம்

ஆனால்

என் உதடுகளோ

தடுமாறுகிறது

அதை சொல்ல

கண்களை

மூடினால் தான்

கனவுகள் வரும்

ஆனால்

கண்களை மூடாமலேயே

கனவு காண்கிறேன்

உன்னால்

நீல வானத்தை

உருக்கி

கவிதை

எழுதினால் கூட

போதாது

என் காதலை

உன்னிடம்

சொல்வதற்கு

என்னை

மீள முடியாத

சிறை வாசம்

செய்தாய்

உன்

கண்களை கொண்டு

நான் கொள்ளும்

பிடிவாதமும்

தோற்றுப்போகிறது

உன்

உண்மையான

அன்பின் முன்

ஒவ்வொரு வருடமும்

பூக்கள் புதிதாகலாம்

ஆனால்

அதை

கொடுக்கும் வாங்கும்

கைகள்

எப்பொழுதும்

மாறக்கூடாது

நான் என்றும்

சுடர்விட்டு எரியும்

விளக்கே

உந்தன்

அன்பெனும்

எண்ணெய்

இருக்கும் வரை

உன்னை

தினம் தினம்

சந்திக்கும்

ரகசிய அறை

இதயம் என்னும்

சுரங்கம்

சிறிய சிறிய

ஊடல்கள்

காதலை

பிரிப்பதற்கு அல்ல

அது மேலும்

காதலை

வலிமையாக்குகிறது

நான் எப்பொழுதும்

உன் நினைவுகளுடன்

மட்டுமே

பயணிக்கிறேன்

நீ

என்னுடன்

இல்லாதபொழுது

என்னால்

தனித்து

செயல்பட முடியவில்லை

உன் பார்வையால்

என்னை

அபகரித்த பிறகு

வருடத்திற்கு

ஒருமுறை தான்

வசந்த காலம் வரும்

ஆனால்

எனக்கு

ஒவ்வொரு நாளும்

வசந்த காலமே

உன்னை நினைக்கையில்

உன் கண்களுடன்

பேசிப்பேசி

புதிய மொழியையும்

கற்றுக்கொண்டேன்

விழிகள் இரண்டும்

சோகங்களை கொண்டன

உன்னை காணாத வரை

பூந்தோட்டமும்

பேசிக்கொள்கின்றன

உன்னிடம் இருந்து

வரும் வாசம்

எங்கும்

கண்டதில்லையே என்று

மென்மையான

என் இதயமும்

கணம் கொண்ட

இதயமாக

மாறியது

நீ

என்னை விட்டு

விலகிய

பின்பு

ஏனோ

கலங்குகிறது

என்

மனம்

உன்னை விட்டு

பிரிகையில்

நீ பேசுகையில்

உன் குரலில்

இனிமையான

இசையை

உணர்கிறேன்

மழையில்

நனைவதை

தடுக்க

குடையில்

இருக்கும்

நாம் இருவரும்

காதல் மழையில்

நனைகிறோம்

உன்னில்

இருந்து

வரும்

கண்ணீர்

என்

இதயத்தை

துளைத்தெடுக்கிறது

உன்

கால் கொலுசுகளின்

சத்தமும்

கை வளையல்களின்

ஓசையும்

என் காதில்

தேன் போல்

பாய்கிறது

பனியாக

உறைந்து போய்

நிற்கிறேன்

உன்

நாணத்தை

காணும்போது

கரைசேரும்

வாய்ப்பிருந்தும்

கரையேற

விருப்பமில்லை

உன்

நிலவொளியில் இருந்து

நான் எழுதிய

கவிதைகளும்

கண்ணீர் சிந்துகிறது

நீ மௌனமாக

இருக்கையில்

ஆயுள் முழுவதும்

சிறை வாழ்க்கையும்

விரும்புவேன்

அது

உன் இதயமாக

இருந்தால்

நான் எழுதும்

கவிதைக்கு

நீ தான்

உயிரூட்டுகிறாய்

என்

விழிகளால்

உன்

விழிகளை

கண்டேன்

செய்வதறியாது

சிலை போல

நின்றேன்

காலத்தின் நொடிகள்

என்னை

கடந்து செல்லும்போது

என்னை

ரணமாக்கி விட்டு

செல்கிறது

உன்

நினைவுகளால்

எனக்கு

நினைவென்றாலே

அதற்க்கு

நீ தான்

அர்த்தம்

இரவெல்லாம்

கண்கள்

மூட

மறுக்கிறது

உன்னை

காதலித்ததில் இருந்து

உன்னை

கண்டது முதல்

என் முகவரியை

இழந்துவிட்டேன்

ஏனெனில்

என்

நினைவெல்லாம்

நீ

மட்டும் தான்

நிரம்பி இருக்கிறாய்

என்

கால்கள் இரண்டும்

உன்னை

நோக்கியே

நடக்கச்சொல்கிறது

உன்னை

பிரிய

மனமில்லாமல்

கண்ணாடியில்

என் முகத்தை

காணும்போது

அதில்

உன் முகம்

மட்டுமே

தெரிகிறது

உன்னை

எப்போதும்

பார்த்துக்கொண்டே

இருக்கிறேன்

பகலில் நிஜத்தில்

இரவில் கனவில்

வானத்தில்

பறக்க

சிறகுகள் தேவை

ஆனால்

சிறகுகள் இல்லாமல்

பறப்பேன்

உன்னை

நினைக்கும்போது

வானத்தில் தோன்றும்

அழகிய வானவில்லை

பார்த்திருக்கிறேன்

மகிழ்ச்சியால்

பூத்து குலுங்கும்

மலர்களின்

அழகை பார்த்திருக்கிறேன்

ஆனால்

உன்னை போன்ற

ஒரு பேரழகை

எங்கும் பார்த்ததில்லை

வாழ்க்கையில்

எதை

வேண்டுமானாலும்

இழப்பேன்

ஆனால்

அன்பே

உன்னை மட்டும்

எதற்காகவும்

இழக்க மாட்டேன்

கண்ணோடு

கண் சேர்வது

காதல் என்றால்

தூரத்தில் இருந்தாலும்

நினைவுகளிலே வாழ்வது

அதை விட மேலானது

என் மீது

காதல் தூறல்

விழ

வானில்

வண்ணமயமாய்

காட்சியளிக்கும்

வானவில்லாக மாறியது

என் மனம்

உன்னுடன்

இருக்கும்

ஒவ்வொரு

நிமிடமும்

எனக்கு

மிகப்பெரிய

பொக்கிஷம்

என் நினைவுகளில்

நீச்சலடிக்க தெரியாமல்

மூழ்கிப்போனேன்

உன்

அன்பு என்னும்

கடலில்

நீ தந்த

குளிர்ந்த காபியும்

இதமாகவே

இருந்தது

உன்

அன்பெனும் சூட்டில்

அன்பு என்பதின்

அர்த்தத்தை

உணர்ந்து கொண்டேன்

உன்னுடன்

பழகிய பின்பு

என் வாழ்க்கையை

வாழ ஆரம்பித்தது

உன்னை

பார்த்த

பிறகு தான்

உன் அன்பில்

வாழ்வதற்கு

உன்னை

முதலில்

சந்திக்கும்போது

உன்னிடம் வீழ்ந்தேன்

உன்னுடன்

பழகிய பிறகு

வாழ விரும்புகிறேன்

என்றைக்கும்

நீ

என்னை விட்டு

விலகினாலும்

உன் நினைவுகளுடனே

வாழ்ந்து கொண்டிருப்பேன்

ஏனெனில்

என் காதல்

உண்மை

நீ

சில நேரங்களில்

என் மீது

பொய் கோபம் படுகிறாய்

அதை

நான் ரசிப்பேன்

ஏனெனில்

எனக்கு தான்

தெரியும்

அது கோபம் அல்ல

வெட்கம் தான் என்று

என்னையே

நான்

மறக்கிறேன்

உன்னை

காணும் வேளையில்

குளிரிலும்

நான்

பாதுகாப்பாக

உணர்கிறேன்

உன் பார்வை

என்ற போர்வையில்

உன் பார்வையால்

கைதாக்கி

இதயம் என்னும்

சிறையில்

அடைத்துவிட்டாய்

என்னை

உன் அன்பை

மிஞ்ச

எவரும் இல்லை

எனவே தான்

உன்னை

கெஞ்சி கேட்கிறேன்

காதலி என்று

அன்று

எனக்கு

பேரின்பத்தை

கொடுத்த

உன் நினைவுகள்

இன்று

பெரும் வலிகளை

கொடுக்கின்றன

நீ

பிரிந்து சென்ற பிறகு

அன்று

உனக்காக

எதையும்

செய்வேன்

என்றேன்

ஆனால்

இன்றோ

எதையும்

செய்ய முடியாத

நிலையில்

இருக்கிறேன்

உன் பிரிவை தாங்காமல்

நீ

என்னை வெறுக்கும்

ஒவ்வொரு முறையும்

நான்

நரகத்தை உணர்கிறேன்

ஒவ்வொரு முறையும்

காதல் கடிதத்தை

எழுத முயற்சிக்கிறேன்

ஆனால்

வார்த்தைகள்

ஏதும் கிடைக்கவில்லை

என் காதலின்

ஆழத்தை வெளிப்படுத்த

உன்னுடைய

நினைவுகள்

என் இதயத்தில்

ஏன்

யுத்தம் செய்கிறது

என் இதயம்

போர்க்களமா என்ன

காதல்

ஒரு காவியம்

உண்மையாக

காதலிப்பவர்களுக்கே

அதன் இனிமை புரியும்

உன்னை

காதலிக்க

இந்த

ஜென்மம்

ஒன்று

போதாது

கடலில் விழும்

மழைத்துளி

போல

உன்

அன்பெனும் கடலில்

கலந்துவிட்டேன்

உன்னை

தழுவிச்செல்லும்

தென்றலானது

உன் நினைவுகளையும்

சேர்த்து

கொண்டு செல்கிறது

அந்த தென்றலையும்

சிறை பிடித்துள்ளேன்

உன் நினைவுகள்

என்னோடே இருக்க

வேண்டுமென்று

உன்னை

கண்ட பிறகே

வாழ்க்கை

எவ்வளவு இனிமையானது

என்று உணர்ந்தேன்

பறவைகளுக்கு

இறக்கை இருப்பது

பறக்கத்தான்

அதுபோல

நான் இருப்பது

உன் அன்பெனும்

காதலில் மிதக்கத்தான்

இதுவரை

ரசிக்க தெரியாத

எனக்கு

இப்பொழுது

எதை கண்டாலும்

ரசிக்க தோன்றுகிறது

உன் நினைவுகளால்

தென்றலாக

என் மனதுக்குள்ளே

நுழையும்

சில நினைவவுகள்

வெளியேறும்போது

என் மனதை

போர்க்களமாக்கி செல்கின்றன

நீ

என்னை

கடந்து செல்லும்போதெல்லாம்

என் விழிகள்

இரண்டும்

உன்னை நோக்கியே

திரும்புகிறது

உன்னிடம்

காதலை வெளிப்படுத்த

நெருங்கும் நேரத்தில்

தோன்றும் ஆனந்தம்

உன்னை நெருங்கியதும்

மொழிகள் அனைத்தையும்

மறக்கின்றேன்

பிறகு எப்படி

சொல்வது

என் காதலை

காதலிக்க

கற்றுக்கொண்ட

இதயத்திற்கு

அதிலிருந்து

மீள

வழி தெரிவதில்லை

கண்கள் இரண்டும்

உறைந்துபோனது

உன்னை

கண்டவுடன்

உன்

அன்பெனும்

மாளிகையில்

வாழ்நாள் முழுவதும்

வசிக்க ஆசை

விலகாத

கவலைகளும்

பறந்து சென்றுவிடும்

உன் மடியினில்

தலை வைத்தபிறகு

கண்கள் கலங்கியது

இதழ்கள் மௌனமானது

இதயம் கனத்தது

நீ

என்னைவிட்டு

பிரிகையில்

காதலிக்கும்போது

தெரிவதில்லை

பிரிவின் வேதனை

பிரியும்போது

நினைப்போம்

ஏன் தான்

காதலித்தோம் என்று

காதலிக்கும்போது

கிடைக்கும் இன்பம்

சொர்கத்தை விட

மேலானது

பிரித்தலின்போது

கிடைக்கும் துன்பம்

நரகத்தையும் விட

கொடியது

காதலை விட

இன்பம் கொடுப்பது

ஏதுமில்லை

அதே நேரத்தில்

காதலை விட

துன்பம் கொடுப்பதும்

ஏதுமில்லை

கண்கள் மூடினால்

கனவில்

நீ தான்

கண்கள் திறந்தால்

காணும் இடமெல்லாம்

நீ தான்

என்ன மாயம்

செய்தாயோ

காதல்

சிறகுகளை முளைத்து

பறக்க வைக்கும்

அதே காதல்

சிறகுகளை கத்தரித்து

அதல பாதாளத்தில்

கொண்டு செல்லும்

காதலிக்கும்போது

மிகவும்

ஆழமாக போகாதே

பின்பு

அதிலிருந்து

மீண்டு வருவது

கடினம்

ஆயுள்கள்

பல வேண்டும்

உன்னை

நேசிப்பதற்கு

என்

ஒவ்வொரு

சுவாசமும்

உன்னை

நேசிக்கிறது

ஏனெனில்

என் சுவாசமே

நீ தான்

செல்பேசியை

எடுத்ததும்

உங்களுக்கு

யார்

நினைவுக்கு வருகிறார்களோ

அவர்களை

ஒருபோதும்

இழந்து விடாதீர்கள்

உன்னை

வர்ணிக்கும்போது

கவிதையும் வெட்கப்படுகிறது

வர்ணனைகளை

கண்டு

ஒருவரின் மீது

பொய்யான

அன்பை காட்டி

அதை

அவர்களை

நம்ப வைப்பது தான்

பெரிய துரோகம்

என்னுடைய

ஒவ்வொரு

கண்ணீர் துளிகளும்

உன் மீது

உண்மையான

அன்பை

வைத்ததற்கான

வெகுமதியா?

நீ

என் உயிரோடு

கலந்திருக்கும்போது

உன்னை

எப்படி

மறக்க முடியும்

என்னால்?

என் கைபேசியை

எடுக்கும்போது

உன்னிடமிருந்து

எப்பொழுது

மெசேஜ் வரும்

என்று

ஒவ்வொரு நிமிடமும்

ஏங்குகிறது

என் மனம்

உனக்கும் எனக்குமான

பயணம்

இந்த ஜென்மத்தில்

மட்டும் இல்லை

அடுத்த ஜென்மத்திலும்

தொடரும்

என்று சொல்லிவிடு

விதிக்கு

நம்மை

அளவில்லாமல்

அழவைக்க முடியும்

என்றால்

அது

நாம் அளவில்லாமல்

அன்பு வைக்கும்

ஒருவரால் மட்டுமே

முடியும்

மனம்

முடிக்கும் வரை

மட்டுமே

நேசிப்பது

காதல் அல்ல

உயிர்

பிரியும் வரை

நேசிப்பது தான்

உண்மையான காதல்

ஒவ்வொரு நாளும்

உன்னிடம் பேச

வாய்ப்பு கிடைக்காதோ

என்ற ஏக்கம்

அப்படி

வாய்ப்பு கிடைத்தாலும்

உன்னிடம் பேச

ஒரு தயக்கம்

காலங்கள் மாறலாம்

வாழ்க்கை மாறலாம்

ஆனால்

உன் நினைவுகள்

என்றும் மாறாது

நான்

பிறக்கும் போது

இவ்வுலகை கண்டேன்

உன்னை

முதன்முதலில்

கண்டபோது

இவ்வுலகையே மறந்தேன்

உன்னுடன்

இருந்த காலங்களில்

வானத்தில் பறப்பது போல

உணர்ந்தேன்

நீ என்னுடன் இல்லாத

இந்த நேரத்தில்

பாதாளத்தில்

தூக்கி வீசப்பட்டேன்

குயிலினும் இனிய

உன் குரலை கேட்க

என்னுடைய செவிகள்

காத்துக்கிடக்கின்றது

உன் குரலிசையை

தொடங்குவாயாக

ஒரு பருகு

அன்னமும் இறங்கவில்லை

என்னுள்

ஏனெனில்

என்னுள் முழுக்க

நீ நிறைந்துள்ளாய்

உன் மீதுள்ள

காதல் உணர்வை

வெளிப்படுத்த

மொழிகள் ஏதும்

போதவில்லை எனக்கு

என்னுடைய கண்கள்

இமைக்க மறுக்கின்றது

உன்னை

பார்த்துக்கொண்டிருக்கும் போது

உனக்காக

எதையும் இழப்பேன்

ஆனால்

உன்னை எதற்காகவும்

இழக்க மாட்டேன்

உன்னுள் நான் 

என்னுள் நீ 

நம் இருவருக்கும் 

தனி உலகம்  

என்னுள்

காதல் கவிதைகள் தோன்றுகிறது

உன்னை நினைக்கும்போது

மொழியையே மறக்கின்றேன்

நீ என்னை விட்டு விலகும்போது

இந்த அண்டத்தையே

வலம் வரவேண்டும் என்ற ஆசை

உன்னுடன்

பயணம் செய்யும்போது

கவலைகள்

எனக்கு எப்போதும் இல்லை

உன் அன்பு

இருக்கும் வரையில்

கவிதைகளால் பேசும்

வார்த்தைகளை விட

கண்களால் பேசும்

மௌனமே சிறந்தது

உன் அன்பெனும் சிறைக்குள்

என்னை அடைத்துவிட்டாய்

அதில் நான்

ஆயுள் கைதியாக

இருக்க இருக்க விரும்புகிறேன்

ஒவ்வொரு முறையும்

உன்னிடம் பேசும்போது

நீ மௌனத்தை மட்டுமே

பதிலாக அளிக்கிறாய்

ஆனால்

என் மனம் துடிக்கிறது

உன் பதிலை எதிர்ப்பார்த்து

என் கண்கள் இரண்டும்

உன்னையே தேடுகிறது

ஆனால் அதற்க்கு தெரியாது

நீ என் இதயத்தில்

வாசம் செய்கிறாய் என்று

பூக்களும் ஏங்குகிறது உன்னை காண

ஏனெனில் அந்த பூக்களுக்கெல்லாம்

ராணி நீ தானே

என் காதலை

விழிகள் மூலம் வெளிப்படுத்தினேன்

கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினேன்

ஆனால் அது போதவில்லை எனக்கு

ஏனெனில் என் முழு காதலை சொல்ல

வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை

உங்களின் மனதிற்கு பிடித்த பல Latest Love Quotes யை மேலே படித்து இருப்பீர்கள். மேலும் இந்த பதிவில் அவ்வப்போது புதிய காதல் கவிதைகள் சேர்க்கப்படும். இதை பற்றிய உங்களின் கருத்துகளை கீழே பதிவிடவும்.

Leave a Comment