சுதந்திர தின நாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு சிறந்த வாழ்த்து கவிதைகளை உங்களுக்காக வழங்கியுள்ளேன்.
இந்த வாழ்த்துக் கவிதைகளை அனைவருக்கும் பகிர்ந்து சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
சுதந்திர தினம் என்றாலே எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்களின் தியாகம் தான் நினைவுக்கு வரும். தங்களின் வசதிகளை இழந்து, குடும்பங்களை இழந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களை போற்ற வேண்டிய திருநாளே சுதந்திர தினம் ஆகும்.
அவர்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கியேலர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.
இந்த சிறப்பு நாளை கொண்டாட நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அன்றைய நாளில் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் தேசிய கோடி ஏற்றப்படும்.
பல்வேறு இடங்களில் ஏற்றிய பிறகு மூவர்ண கொடி கம்பீரமாக பறக்கவிடப்படும்.
இந்த தியாக திருநாளை சிறப்பிக்கும் விதமாக தேசிய உணர்வை ஏற்படுத்தும் சுதந்திர நாள் வாழ்த்து கவிதைகளை உங்களுக்கு வழங்கியுள்ளேன்.
Independence Day Quotes in Tamil 2022
அன்று பல
சுதந்திர போராட்ட வீரர்கள்
சிந்திய இரத்தம் தான்
இன்று நம்மை சுதந்திர காற்றை
சுவாசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்
நாம்
மதம், மொழி, கலாசாரம்
ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும்
இந்தியராய் ஒன்றுபடுவோம்
வந்தே மாதரம்
சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்
வேற்றுமையில் ஒற்றுமை காணுவதே
நம் பாரதம்
அனைவரும் சொல்வோம்
வந்தே மாதரம்
நமக்கு சுதந்திரத்தை பரிசளித்த
தியாகிகள் அனைவரையும்
மனமார போற்றுவோம்
அனைவருக்கும் சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்
உறவுகள், வசதிகளை துறந்து
எல்லையில் போராடும்
ராணுவ வீரர்களுக்கு
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ஆயிரம் ஆயிரம் வீரர்களின்
உயிர் தியாகத்தில் பிறந்தது
மூவர்ணக்கொடி
அதுவே இந்தியர்களின்
தொப்புள் கொடி
அகிம்சை வழியை
உலகிற்கு சொன்ன நாடு
அதுவே எங்களின்
இந்திய திருநாடு
உயிரை இழந்தாலும்
எங்களின் சுதந்திர காற்றை
இழக்கமாட்டோம்
வாழ்க பாரதம்
நம் முன்னோர்கள்
சிந்திய உத்திரத்தால்
உதித்ததே இந்த சுதந்திரம்
தலை நிமிர்ந்து
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த் என்று..
பாரதம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட
எங்கும் பசியில்லாத நிறைவை கண்டிட
வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற்றிட
அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
உயிர் நீத்த தியாகிகளை
நினைவு கூர்ந்திடுவோம்
சுதந்திரத்தை உயிரென
நினைத்து போற்றிடுவோம்
வடக்கே அரணாக உயர்ந்த இமயம்
முக்கடல் சூழ்ந்த தீபகற்பகம்
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
மக்களின் தாயகம்
நம் இந்திய திருநாட்டை
கண்டு பெருமிதம் கொள்வோம்
சுதந்திரமாக பறக்கவிடுவோம்
மூவர்ண கொடியை
அதற்க்கு பங்கம் விளைவித்தால்
எதிர்த்து நிற்போம்
ஒற்றுமையாய்
ஒவ்வொரு நாளும்
நாட்டை பாதுகாத்து வரும்
தன்னலமற்ற ராணுவ வீரர்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துக்களை
கூறி போற்றுவோம்
நான் பிறந்தது என்னவோ
என் தாயின் வயிற்றில்
ஆனால்
நான் தவழ்ந்து, கற்று, வாழ்வதெல்லாம்
பாரதத்தாயின் மடியில்
இந்திய பாரத தாயின் அரவணைப்பில் வளரும் நாம் இந்திய சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் கொண்டாடுவோம். மேற்கண்ட வாழ்த்து கவிதைகள் உங்களின் தேசப்பற்றை உணர்த்தும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் மதிப்பு மிக்க கருத்துக்களை கீழே பதிவிடவும்.