தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் புத்தாடை தான். தீபாவளி பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
தீபாவளி என்பது ஒரு இந்து பண்டிகை ஆகும். இருப்பினும் அனைத்து மதத்தினராலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு தல தீபாவளி என்று கூறுவார்கள்.
இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும். 2022 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 24, திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
பண்டிகை நாளில் வீட்டை சுத்தம் செய்து மா இலைகள், பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. பிறகு பூஜை அறைகளில் கடவுளுக்கு பூஜை செய்தும், கோவில்களுக்கு சென்றும் கடவுளை வழிபடுவார்கள்.
சிறியவர்களுக்கு முதன்மையான மகிழ்ச்சியை தருவது பட்டாசு வெடிப்பது தான். காலையில் எழுந்தவுடனே பட்டாசுகளை வெடிக்க ஆரம்பிப்பார்கள். சிலர் பண்டிகைக்கு ஒருநாள் முன்னர் இருந்தே பட்டாசுகளை வெடிக்க தொடங்குவார்கள். தீபாவளியின் அடையாளமே பட்டாசு வெடிப்பது தான் என்று கருதப்படுகிறது.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். மேலும் விடுமுறை நாளான அன்று குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவார்கள்.
தீபாவளி பண்டிகை நாளில் செய்யப்படும் அதிரசம் இனிப்பு மிகவும் பிரபலம் ஆகும். அதன் சுவை மிகவும் ருசியாக இருக்கும். பண்டிகை நாளன்று ஒவ்வொரு வீட்டிலும் அதிரசம் இனிப்பு பலகாரத்தை செய்வது வழக்கம். அந்த இனிப்பை போன்றே அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும்.
Diwali Wishes Images in Tamil 2022
நீங்கள் உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை கூற விரும்புவீர்கள் அல்லவா! உங்களுக்காக சில அழகான வாழ்த்துப்படங்கள் மற்றும் கவிதைப்படங்கள் கீழே வழங்குகிறேன். இதை உங்களின் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்திடுங்கள்.
மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அற்புதமான
திருநாளான தீபாவளியை மகிழ்ச்சியுடன்
கொண்டாடுவோம்
Wish You a Happy Diwali 2022
உறவினர்கள் நண்பர்களுக்கு
வாழ்த்துக்கள் தெரிவித்து
இனியதாக
தீபாவளியை கொண்டாடுங்கள்
காலையில் குளித்து
புத்தாடைகளை அணிந்து
மகிழ்ச்சியாக தீபாவளியை
கொண்டாடுவோம்
அன்புடனும்
மகிழ்ச்சியுடனும்
தீபாவளியை கொண்டாடுவோம்
செல்வங்களும் மகிழ்ச்சியும்
சேர்ந்திட
மகிழ்ச்சியான
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீப ஒளியை
ஏற்றும்போது
உங்களின்
துன்பங்கள் பறந்து
மனம்
மகிழ்ச்சியால் நிரம்பட்டும்
இருண்ட வானத்தில்
தீப ஒளியின்
வெளிச்சம் பரவும்போது
வானம்
வண்ணமயமாக மாறுகிறது
கண்களுக்கு விருந்து படைக்கும்
தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
பட்டாசுகள் வெடிக்க
இனிப்புகள் ருசிக்க
உறவுகள் சந்திக்க
மகிழ்ச்சியான
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Wish You Happy Diwali
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
இதயம் முழுவதும்
மகிழ்ச்சி நிரம்பி பொங்க
இதயம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபங்களின் ஒளியால்
இருள் நீங்க
உறவுகளின் அன்பால்
மகிழ்ச்சி பொங்க
அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபங்களை ஏற்றி
மகிழ்ச்சி என்ற ஒளியை
அனைவருக்கும் பரப்புவோம்
அனைவரும் நலமோடு வாழ
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பட்டாசுகளை வைத்து
துன்பங்கள் அனைத்தையும்
விரட்டுவோம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Wish You Happy Diwali
மகிழ்ச்சி பொங்க
ஆரோக்கியம் சிறக்க
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்
இருள் நீங்கி
எங்கும் ஒளி பரவிட
இனிய தீபத்திருநாள்
நல்வாழ்த்துக்கள்
என்றென்றும்
உங்களின் இல்லங்களில்
மகிழ்ச்சி பொங்க
தீபாவளி திருநாள்
வாழ்த்துக்கள்
உறவுகள் அனைவரும்
ஒன்று கூடி மகிழ்ந்திடுங்கள்
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
உன் வாழ்வு
ஒளியை பெற்று
செழுமை அடைந்திட
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாழ்வில் ஒளி ஏற்றும்
தீபத்திருநாள்
தீபாவளி
மத பேதமின்றி
அனைவரும் கொண்டாடும்
மகிழ்ச்சிகரமான தீபாவளிக்கு
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
பாதுகாப்பான
தீபாவளி வாழ்த்துக்கள்
பட்டாசுகள் வெடித்து
மகிழ்ந்திட
இனிய
தீபத்திருநாள்
நல்வாழ்த்துக்கள்