Friendship Day Wishes in Tamil 2022: நாம் விருப்பப்பட்டு அமைத்துக்கொள்ளும் ஒரே உறவு நண்பர்கள் மட்டும் தான். அந்த உறவை கொண்டாடும் தினம் தான் உலக நண்பர்கள் தினம். இந்நாளில் உங்களின் நண்பர்களுக்கு வாழ்த்து கவிதைகளை அனுப்ப வேண்டுமா? அதற்க்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சமூகத்தில் நம்மை சுற்றி பல உறவு முறைகள் இருக்கும். அதில் நண்பர்கள் என்னும் உறவு தனித்துவமானது ஆகும். ஏனெனில் மற்ற உறவுகள் அனைத்தும் இரத்த சம்மந்தமான உறவுகளாக இருக்கும். ஆனால் நண்பர்கள் உறவு என்பது அன்பால் மட்டுமே உருவாகக்கூடியது.
ஜாதி, மதம், இனம், ஏழை போன்ற எந்த சாயங்களாலும் தீண்டப்படாத உயர்ந்த உறவு Friendship ஆகும். காலங்கள் பல சென்றாலும் நண்பர்களுடன் இருந்த அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
இன்றைய இயந்திர உலகில் நாம் பலவற்றை இழந்துகொண்டிருக்கிறோம். நண்பர்களை சந்தித்தல், அவர்களுடன் நேரம் செலவிடுவது அவையெல்லாம் தற்போது குறைத்துக்கொண்டு வருகிறது. நண்பர்கள் தினத்தில் ஆவது நண்பர்களுக்காக செலவிடுவோம். அந்நாளில் நண்பர்கள் வாழ்த்துக் கவிதைகளை (Friendship Wishes Quotes) யை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்திடுங்கள்.
Friendship Day Wishes & Quotes in Tamil 2022
செல்வத்தை இழந்தாலும்
உறவுகள் விலகினாலும்
என்றும் நீடித்து நிலைப்பது
நட்பு மட்டுமே
சுயநலமற்ற அன்பு
விட்டுக்கொடுக்கும் மனம்
யாரிடமும் விட்டுக்கொடுக்காத குணம்
என்றும் நம் பக்கத்தில் இருப்பவன்
அவனே நண்பன்
உண்மையான நண்பன் கிடைப்பது அரிது
நான் அதிஷ்டம் செய்தவன்
உன்னை போன்ற ஒரு நண்பனை பெற்றதற்கு
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
என் சிறந்த தோழிக்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இன்பங்களையும் பகிர்ந்துகொள்வோம்
துன்பங்களையும் பகிர்ந்துகொள்வோம்
காலங்கள் மாறினாலும்
நம் நட்பு என்றும் மாறாது
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஒன்றாக இருக்கும்போது மகிழ்ச்சியையும்
பிரியும்போது கண்ணீருடன் நினைவுகளையும்
யார் கொடுக்கிறாரோ
அவரே உண்மையான நண்பன்