Christmas Wishes in Tamil: உலகம் முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு மகிழ்வார்கள். அவர்களுக்கான சிறந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கவிதைகளை இந்த பதிவின் மூலம் பகிர்ந்துகொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை தான் உலகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று அனைத்து வழிப்பாட்டு தளங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிதல், நிகழ்ச்சிகளை நடத்துதல், பரிசுப்பொருட்களை வழங்குதல், கிருஸ்து பாடல்களை பாடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அந்நாளில் நடைபெறும். மேலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும்.
கிறிஸ்துமஸ் நாளிற்கு முந்தைய நாளில் இருந்தே அனைவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள தொடங்குவார்கள். உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்வதற்கு சிறந்த கிறிஸ்துமஸ் கவிதைகளை (Best Happy Christmas Wishes) தேடுபவரா நீங்கள்? உங்களுக்காக தான் படங்களுடன் கூடிய வாழ்த்துக்களை இந்த பதிவில் பகிர்ந்துள்ளேன்.
Christmas Wishes in Tamil 2022
உங்களுக்கும்
உங்களின் குடும்பத்தினருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்
என் சகோதர சகோதரிகளுக்கு
இனிய கிறிஸ்துமஸ் பண்டிகை
நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
இனிய மேரி கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்கள்
துன்பங்களையும், துயரங்களையும்
விரட்டும் விடியலாக அவதரித்தார்
தேவன் இயேசு கிருஸ்து
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்
எளிமையாக பிறந்து
எளிமையாக வாழ்ந்து
உலகத்துக்கே வழி காட்டினார்
அன்பின் வடிவமாகிய கர்த்தர்
அனைத்து இல்லங்களிலும்
அனைவரது உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கிட
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள்
மண்ணில் அவதரித்த
விண்ணின் தேவனை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்
அனைவரது வீடுகளும்
பரிசுகளால் நிரம்பிட
கிறிஸ்துமஸ் தாத்தாவின்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்
இறைவனின் கிருபையால்
அனைவரும் நலம் பெற்று
நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்
அன்புள்ளம் கொண்ட தூயவர்
அனைவரது மனதிலும்
கடவுளாய் வாழும் எளியவர்
அவரே எங்களின் தேவன்
இயேசு பிரபு