நீங்கள் உங்களின் அன்பான சகோதரிக்கு (Sister) பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல சிறந்த கவிதைகளை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்போது வகையில் சிறந்த Birthday Wishes யை Tamil மொழியில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பொதுவாக ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, அண்ணன், தங்கை அல்லது சகோதரி போன்ற பலவிதமான உறவுகள் (Relationship) இருக்கும். அந்த உறவுகளில் சகோதரி என்ற உறவு ஒரு தனித்துவமான அன்பாக பார்க்கப்படுகிறது.
தங்கையை பாசமலர் என்று செல்லமாக கூறுவதுண்டு. அப்படிப்பட்ட தங்கையின் பிறந்தநாள் வரும்போது சாதாரண வாழ்த்துக்களை கூற விரும்பமாட்டார்கள். தங்கையின் பிறந்தநாள் வாழ்த்துக்களை கவிதை நடையில் சொல்லவே விரும்புவார்கள். அதற்காக நீங்கள் மிகவும் யோசிக்க தேவையில்லை. நான் இங்கு Birthday Wishes for Sister in Tamil என்ற தலைப்பில் கொடுத்துள்ள கவிதை வாழ்த்துக்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
நீங்கள் தேர்வு செய்த பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை வாழ்த்து அட்டையிலோ அல்லது பிறந்தநாள் பரிசுப்பொருள் மீதோ எழுதி கொடுக்கலாம்.சரி வாருங்கள் வாழ்த்துக் கவிதைகளை காண்போம்.
Birthday Wishes for Sister in Tamil
மலர்களின் நறுமணம் மாறலாம்
ஆனால் என் தங்கையின் மீதுள்ள
பேரன்பு என்றும் மாறாது
என் அன்பான தங்கைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பாலினும் தூய்மையானது
என் தங்கையின் மீது
வைத்திருக்கும் அன்பு
பாசத்திற்குரிய சகோதரிக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் கொண்டாடும்
என் பாசமலருக்கு
நலமுடன் வாழ
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கை முழுவதும்
நிறைவான செல்வத்தை பெற்று
மன நிறைவுடன் வாழ்வாயாக
உன் சகோதரனின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லை
உன் பிறந்தநாளுக்கு
ஏனெனில்
உன்னை விட உயர்ந்த பரிசு
வேறு ஏதுமில்லை எனக்கு
என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
என் தங்கையை போன்ற
உறவை கண்டதில்லை இதுவரை
அன்பான பாசமலருக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒரு வருடத்தின்
மிகச்சிறந்த நாள் என்றால்
அது உன் பிறந்தநாள் மட்டுமே
என் பிரியமான சகோதரிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
யாருக்கும் கிடைக்காத ஒரு அதிஷ்டம்
நீங்கள் எனக்கு தங்கையாக கிடைத்திருப்பது
இன்று பிறந்தநாள் காணும்
என் அன்பு சகோதரிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனக்கு கடவுள் கொடுத்த
மிகப்பெரிய பரிசு
உங்களை எனக்கு
தங்கையாக கொடுத்திருப்பது
அன்பு தங்கைக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
விண்ணில் இருந்து
மண்ணிற்கு வந்த
என் இணைபிரியாத
சகோதரிக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் பல
மலர்களில் சேராத மலரொன்று
வானில் சேராத தேவதையொன்று
இம்மண்ணில் உதித்த தினம் இன்று
அன்பான பாசமலருக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பான சகோதரிக்கு
அன்பான சகோதரனின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
ஒருமுறை தான் பிறப்பு
ஒவ்வொரு ஆண்டும்
பிறந்தநாளை கொண்டாடுவது
மீண்டும் புதிதாக பிறந்த
மகிழ்ச்சியை கொடுக்கும்
அந்த அற்புதமான நாளை
கொண்டாடி மகிழ்வோம்
மீண்டும் பிறப்பெடுக்க விரும்புகிறேன்
என் தங்கையின் பாசத்தை காண
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
அன்பு எல்லை இல்லாதது. அதை வெளிப்படுத்த உங்களுக்கு தடை ஏதும் இல்லை. மேற்கண்ட Sister க்கான Birthday Wishes Quotes யை பயன்டுத்தி உங்களின் அன்பை வெளிப்படுத்துங்கள். இந்த பதிவில் உள்ள பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் உங்களின் சகோதரிக்கு வாழ்த்துக்களை கூறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
30.3.2009
HBD my sister 🎂🥺 life long happy ah erukanum, God+ you da
HBD 🎂🥰
I like it