நீங்கள் திருமண நாள் வாழ்த்துக்களை கூறுவதற்கு Best Wedding Anniversary Wishes யை Tamil மொழியில் தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? ஆம் என்றால் அந்த கவலையை விடுங்கள். ஏனெனில் உங்களுக்கான பல சிறந்த திருமண நாள் வாழ்த்துக்களை தமிழ் மொழியில் வழங்கியுள்ளேன்.
பொதுவாக திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கியமான தருணம் ஆகும். ஒரு ஆணும் பெண்ணும் பல கனவுகளோடு திருமண பந்தத்தில் இணையும் அந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். ஒருவருக்கு அவர் எதிர்பார்த்தபடி ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைத்துவிட்டால், அவரது வாழ்வில் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக அவர்களின் வாழ்க்கையை தொடங்குவார்கள். பிறகு ஒரு வருடம் முடிந்த பிறகு முதல் திருமண நாளை கொண்டாடுவார்கள். வாழ்க்கையில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அது அவர்களின் அன்பினால் காணாமல் போய்விடும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு திருமண நாளையும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் Wedding Anniversary யை கொண்டாடும்போது, அவர்களை வாழ்த்த பரிசு அட்டையில் சிறந்த Wishes யை எழுதிக்கொடுப்பது சிறப்பாக இருக்கும். ஆனால் உங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் திருமண நாள் வாழ்த்துக்களை எழுத முடியாமல் இருக்கலாம். அதற்காக தான் இந்த பதிவை வழங்கியுள்ளேன். இதில் உங்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வாழ்த்துக்களை காண்பீர்கள்.
இது போன்ற சிறந்த Marriage Wishes யை பரிசு அட்டையில் எழுதி கொடுப்பதன் மூலம் தம்பதிகளை மகிழ்விக்கலாம். சரி இப்பொழுது திருமண ஆண்டு வாழ்த்து கவிதைகளை பார்க்கலாம்.
Best Wedding Anniversary Wishes in Tamil
இரு உள்ளங்களும் ஒன்று சேர்ந்து
குறையாத அன்புடனும் காதலுடனும்
நீண்ட காலம் வாழ்க
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள்
பூக்களில் வரும் நறுமணத்தை போன்று
வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி
என்ற நறுமணம் வீசட்டும்
முதலாம் ஆண்டு
திருமண நாள்
வாழ்த்துக்கள்
தேனின் சுவை
என்றும் இனிப்பதை போன்று
காதலின் அன்பும்
என்றும் இனிக்க
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள்
இரண்டு கைகளை மட்டும்
இணைத்துக்கொள்ளாமல்
இரண்டு மனங்களையும்
இணைத்துக்கொள்வதே திருமணம்
என்றும் இணைந்து வாழ
இனிய திருமண நாள்
நல்வாழ்த்துக்கள்
காதல் என்னும் பாலம்
பிறப்பையும் இறப்பையும் இணைக்கும்
அன்பின் பிணைப்பு
அதில் பயணங்கள் இனித்திடும்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
மலரும் மணமும் போல
என்றும் இணை பிரியாமல்
வாழ்க அன்புடன்
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
நோய் நொடியில்லாமல்
மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல்
நகமும் சதையுமாக
இணைபிரியா தம்பதிகளாக
நீடுடி வாழ்க
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
வாழ்க்கை என்பதற்கு
மற்றொரு பெயர்தான் திருமணம்
திருமண நாளை கொண்டாடும்
உனக்கு என் அன்பான
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
இரு மனங்களும்
எப்பொழுதும் ஒன்றாக
வாழ்க்கை பயணத்தை
தொடர வேண்டும்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
அன்பால் இணைந்த
உங்கள் வாழ்க்கை
என்றும் மகிழ்ச்சியால்
நிறைந்திருக்கட்டும்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
அன்பின் மழையில் நனையும்
திருமண தம்பதியினரின்
எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
சொந்தங்கள் சூழ
மந்திரங்கள் ஓத
வாத்தியங்கள் முழங்க
மணமுடித்து
ஓராண்டை நிறைவு செய்யும்
தம்பதியினருக்கு
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
வெவ்வேறு இடங்களில் பிறந்து
மாங்கல்ய கயிறால் இணையும்
அற்புதமான உறவே திருமணம்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
அன்பும் மகிழ்ச்சியும்
மாறி மாறி போட்டிபோட்டுக்கொள்ளும்
அழகிய தருணமே திருமணம்
என் இனிய தோழன் தோழிக்கு
திருமண நல்வாழ்த்துக்கள்
அக்கினியை சாட்சியாய்
மூன்று முடிச்சுகள் போட்டு
திருமணம் என்னும்
புதிய வாழ்க்கையை தொடங்கும்
இதயங்களுக்கு
இனிய திருமண
நல்வாழ்த்துக்கள்
செல்வங்களை பல குவித்து
அன்பால் இரு கைகளை கோர்த்து
வாழ்வில் ஆனந்த வெளிச்சத்தை
அடைந்திடுவீர்
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்
இந்த பதிவில் Wedding Anniversary கான Wishes யை Tamil மொழியில் கண்டீர்கள். மேலும் இந்த பதிவில் அவ்வப்போது புதிய திருமண நாள் கவிதைகள் சேர்க்கப்படும். எனவே சில நாள்களில் மேலும் பல கவிதைகளை காண்பீர்கள். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.