Best Books Quotes in Tamil | புத்தக வாசிப்பு கவிதைகள்

இந்த பதிவில் சிறந்த புத்தக வாசிப்பு கவிதைகளை (Books Quotes) உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன். இந்த கவிதைகளை வாசிப்பதன் மூலம் புத்தகங்களின் அருமைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்.

சிறந்த புத்தகங்களின் பயன்களை பற்றி சில வரிகளில் சொல்லிவிட முடியாது. அது மனிதர்களுக்கு எண்ணற்ற பயன்களை வாரி வழங்குகிறது. ஒரு நல்ல புத்தகம் ஆனது வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும்.

ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி புத்தகங்களுக்கு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரிடமும் கேட்டால், நிச்சயமாக அவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் உண்டு என்றே கூறுவார்கள்.

நீங்கள் புத்தகங்களை வாசிக்கும் போது அது மன அமைதியையும், தெளிவையும் கொடுக்கிறது. உங்களின் அறிவை மேலும் மேலும் வளர்த்துகொண்டே இருக்கும். உங்களை வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் ஒளியாய் புத்தகங்கள் விளங்குகிறது. 

நீங்கள் புத்தக வாசிப்பை தொடங்க விரும்புகிறீர்களா? நிச்சயம் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். புத்தகங்களை பற்றிய பொன்மொழிகள், கவிதைகளை தெரிந்துகொள்வதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

Best Books Quotes யை Tamil மொழியில் உங்களுக்கு வழங்குகிறேன்.

Best Books Quotes in Tamil 

book quotes in tamil

புத்தகங்கள் 

வெறும் காகிதங்கள் அல்ல 

அவை 

உன் வாழ்க்கையை மாற்றும் 

தந்திரங்கள் 


quotes about books in tamil

அறியாமை என்ற  இருட்டில் இருந்து 

அறிவு என்ற வெளிச்சத்திற்கு

கொண்டு வரும் 

வழிகாட்டியே புத்தகங்கள் 


book reading quotes in tamil

புத்தகங்களில் இருப்பது 

வெறும் எழுத்துக்கள் அல்ல 

வாழ்விற்கான 

அற்புத பொக்கிஷம் 


books proverbs in tamil

புத்தக வாசனையை 

விரும்புபவனே 

சான்றோர் போற்றும் 

மனிதனாகிறான்


quotes on books in tamil

 ஒருவனை 

எந்த காலத்திற்கும்  

கொண்டு செல்லும் வலிமை 

புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு 


quotes about writing

நல்ல புத்தகங்களை 

திருப்பும்போது 

பல காலங்கள் 

முன்னோக்கி செல்கிறான் 


reading day quotes

நூலகத்திற்கு செல்லும் 

மனிதனால் மட்டுமே 

சொர்கத்திற்கு செல்லும் 

வழியை கண்டறிய முடியும் 


reading books quotes

வழிப்பாட்டு தலங்களுக்கு 

செல்வதை காட்டிலும் 

புத்தக களஞ்சியங்களுக்கு செல்வதே 

ஞானத்தை பெறுவதற்கான வழி 


best book quotes

ஒரு நல்ல நண்பனாக 

புத்தகங்களை தவிர 

வேறு யாரும்

இருக்க முடியாது 


best book quotes tamil

புத்தகங்களை வாசிக்க 

உன் தலை குனியும் போது 

உன் வாழ்க்கை

மேல் நோக்கி உயரும் 


tamil books quotes

புத்தகத்தை வாசிக்க தெரியாத ஒருவனுக்கும் 

வாசிக்க தெரிந்தாலும் வாசிக்காத ஒருவனுக்கும் 

வித்தியாசம் ஏதும் இல்லை 


best books quotes in tamil

நீ புத்தகங்களை புரட்டினால் 

அது உன் வாழ்க்கையையே 

புரட்டி போடும் 


Puthaga vaasippu kavithai

புத்தகங்களில் 

பலர் வாழ்ந்து கொண்டு 

தான் இருக்கிறார்கள் 

அதை படிக்கும் போது தான் 

உன்னால் உணர முடியும் 


puthaga kavithaigal

ஒருவன் புத்தகத்தின் மீது 

கொண்ட காதலானது 

வெற்றி என்னும் தேரின் மீது 

வலம் வர வைக்கும் 


best books quotes in tamil

ஒருவன் படிக்கும் 

புத்தகங்களை கொண்டு 

அவனின் எண்ணங்களை 

தெரிந்துகொள்ளலாம் 


book reading quotes in tamil

எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளையும் 

வார்த்தைகளை கொண்ட பக்கங்களையும் 

பக்கங்களை கொண்ட தொகுப்பையும் 

கொண்டது தான் புத்தகம்


reading books quotes

இலக்கியங்களும், வரலாறுகளும்,

போராட்டங்களும், அனுபவங்களும்,

புதுமைகளும், செழுமைகளும் 

அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கும் 

புனித இடமே புத்தகம் 


 

மேற்கண்ட புத்தக வாசிப்பு கவிதைகள் உங்களுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். இன்றே உங்களின் புத்தக வாசிப்பை தொடங்கி அதன் பலனை பெறுங்கள். 

Leave a Comment