வணக்கம் நண்பர்களே, இந்த இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறீர்களா? அதனால் தான் இந்த இணையதளத்திற்கு வந்தீர்கள் என்றால், சரியான இடத்திற்கு வந்தீர்கள்.
பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான நாட்களில் பிறந்தநாள் முக்கியமானதாகும். எல்லோரும் கேக், இரவு உணவு மற்றும் புதிய ஆடைகளுடன் தங்கள் பிறந்தநாளை விரும்பி கொண்டாடுவார்கள். மற்றவர்கள் இனிப்புகள் வழங்கி, கோவில்களுக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர். பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை அனுப்புவது இன்றியமையாததாகிவிட்டது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது வாழ்த்து அட்டை மூலமாகவோ வாழ்த்துக்களை அனுப்புவோம். அப்படி அனுப்ப Best Happy Birthday Wishes யை நீங்கள் தேடுகிறீர்களானால், கவலைப்பட வேண்டாம். இங்கே சில சிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேற்கோள்கள் உள்ளன.
இதன் மூலம், நீங்கள் தனிப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பலாம். இனி தமிழில் தனித்துவமான பிறந்தநாள் வாழ்த்துகளைப் பார்ப்போம்.
Best Birthday Wishes in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறக்கும் நாள் அற்புதமானது
அது ஒவ்வொரு முறையும் வரும்போது
அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உண்மையான அன்பை
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.
அதை உணர்வுகளால் மட்டுமே
வெளிப்படுத்த முடியும்.
மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தூய்மையான அன்புக்கு
முகங்களும் முகவரியும் தேவைப்படாது
நினைவுகள் ஒன்று போதும்
என்றும் நம்மை நினைக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ முதல்முறை பிறந்தபோது அழுதாய்
பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது
மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய்
என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறப்பு என்பது ஒருமுறை தான் நிகழும்
ஆனால் பிறந்தநாள் என்பது
ஒவ்வொரு ஆண்டும் நகரும்
நலமோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உடலாலும் உயிராலும் சேர்ந்த உருவமான நீ
என் மனதில் நீங்காத சிற்பமானாய்
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வருடத்தில் நாட்கள் பல வந்தாலும்
உன் பிறந்தநாளே எனக்கு இனிய நாள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை
உணர்வுகள் மட்டுமே உள்ளது
எப்படி வெளிப்படுத்துவேன் என் உணர்வுகளை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நல்ல உடல் ஆரோக்கியத்தோடும்
முகம் முழுவதும் புன்னகையோடும்
மகிழ்ச்சி நிறைந்த மனதோடும்
என்றும் இன்பம் பெருக்கெடுக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று
மன நிறைவோடு வாழ்வாயாக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நல்ல உடல் நலத்தோடும்
மனம் முழுக்க மகிழ்ச்சியோடும்
என்றும் புன்னகை வழியும் முகத்தோடும்
வாழ்வில் என்றும் இன்பம் பெருக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கொடுக்க கொடுக்க தீராததும்
வாங்க வாங்க குறையாததும்
என்றும் வற்றாததும்
புன்னகை மட்டுமே
நீ எப்பொழுதும் புன்னகையோடு இருப்பாயாக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மற்றவர்க்கு அன்பை கொடுக்கும்போதும்
மற்றவரிடத்தில் இருந்து அன்பை வாங்கும்போதும்
வாழ்க்கையே அர்த்தம் உள்ளதாக மாறுகிறது
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் ஆயிரம் கிடைத்தாலும்
அது உன் உறவுக்கு ஈடில்லை
என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உறவுகள் பல இருந்தாலும்
அது உன் நட்பிற்கு ஈடில்லை
தன்னம்பிக்கையோடும் மனநிறைவோடும்
வாழ்வாயாக
உன் நண்பனின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் இறைவனை வேண்டுகிறேன்
உன்னுடைய ஆசைகள் நிறைவேற
அன்புடன் உன் நண்பன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செடியில் அமர்ந்திருக்கும்
ரோஜாவின் மொட்டு மலர்வது போல
உன் முகத்தில் என்றென்றும் புன்னகை மலர
என் இதயம் கண்டித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புன்னகையால் மலரும் உதடுகளும்
அன்பால் நிறையும் மனதும்
விண்ணைத்தொடும் கனவுகளும்
உனக்கு சொந்தமாகட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புத்தாடைகள் அணிந்து
இனிப்புகளை பகிர்ந்து
மகிழ்ச்சியுடன் இருக்கும்
என் உறவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தூரம் என்பது பெரிதில்லை
நம் அன்பிற்கு முன்னால்
என் பேரன்பிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கை மிகவும் அற்புதமானது
மற்றும் அழகானது
ரசிக்க ஏதாவது ஒன்று
கிடைத்துக்கொண்டிருக்கும் வரை
என் இனிய நண்பனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு பிறந்தநாளிலும்
அதிகரிப்பது உன் வயது மட்டுமல்ல
உன் மீதான என்னுடைய அன்பும் ஆகும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற்று
வாழ்வில் என்றும் மகிழ்ச்சியாக இருப்பாயாக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உடல் வளம்
மன வளம்
மகிழ்ச்சி
செலவங்களை பெற்று
என்றும் நீடோடி வாழ்வாயாக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
துன்பங்களை வென்று
வெற்றிகள் பல பெற்று
வாழ்வில் முன்னேற்றம் அடைவாய்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
காலங்கள் கடந்தாலும்
நிலைமை மாறினாலும்
நம் நட்பு என்றும் மாறாது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ நீண்ட ஆயுளை பெற்று
என்றும் மகிழ்ச்சியாக இருக்க
இறைவனை பிராத்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ பிறந்தவுடன் பெற்றோரை மகிழ்வித்தாய்
இன்று உன்னை சுற்றிலுள்ள
அனைவரையும் மகிழ்விக்கிறாய்
நீ என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக
என் அன்பான நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மலர்களிடத்தில் உள்ள தேனைப்போன்று
தூய்மையான அன்பு நம்முடைய அன்பு
அதை என்றும் களங்கப்படாமல் பார்த்துக்கொள்வோம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
காலங்கள் பல கடந்தாலும்
நம் நினைவுகள் என்றும் கலையாது
என்றென்றும் அன்புடன் தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ காணும் கனவுகளும்
உன் எண்ணங்களும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
என் அன்பிற்குரிய தோழனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன் வாழ்வில்
என்றும் மகிழ்ச்சி என்ற
வசந்த காற்று வீசட்டும்
என் அன்பு இதயத்திற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன் பிறந்தநாளை
நீ மட்டும் கொண்டாடாமல்
உனக்கு பிறகு மற்றவர்களும்
கொண்டாடும் படி வாழ்ந்து காட்ட வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று
மன நிறைவோடு வாழ்வாயாக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நிறைவான மனதையும்
மகிழ்ச்சியான வாழ்க்கையும்
ஆரோக்கியமான உடல் நலமும் பெற்று
சிறப்பாக வாழ்வாயாக
அன்புடன் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வானில் இருந்து விழும்
மழைத்துளிகள் போல
உன் வாழ்வில் என்றும்
சிரிப்பொலிகள் ஒலிக்கட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியான நினைவுகள் மலரட்டும்
அன்பான உறவுகள் கிடைக்கட்டும்
சிறப்பான வாழ்க்கை தொடரட்டும்
பிறந்தநாள் காணும் அன்பு உறவுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நமக்கு பிடித்த அன்பு உள்ளங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவது என்பது அனைவருக்கும் பிடித்தமானதே. பல பிறந்தநாள் வாழ்த்துக்களை மேலே குறிப்பிட்டிருந்தேன். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் இதில் அவ்வப்போது புதிய வாழ்த்துக்கள் சேர்க்கப்படும். எனவே அவ்வப்போது புதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகளை பெறுவீர்கள்.
இந்த பதிவை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும். மேலும் உங்களின் யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.